SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக தனாகர்ஷன ஹோமம்....!

2019-07-20@ 09:32:22

ஒருவர் மிகப் பெரிய செல்வந்தனாக ஆவதற்கு அவரிடம் கடுமையாக உழைக்கும் திறன், பிறருக்கு நன்மை செய்யும் குணம் ஆகியவற்றோடு செல்வ மகளான லட்சுமி தேவியின் கடைக்கண் பார்வையும் நிச்சயம் தேவைப்படுகிறது. பணம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் இலட்சுமி தேவியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இத்தகைய செல்வங்கள் அனைத்தும் நம்மிடம் என்றென்றம் நிலையாக இருக்கவும், மேலும் செல்வ சேர்க்கை உண்டாகவும் செய்யப்படும் ஒரு ஹோமத்தையே தனாகர்ஷண ஹோம பூஜையாகும். இந்த தனாகர்ஷண ஹோமம் எப்படி செய்வது மற்றும் இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் செல்வ செழிப்பு உண்டாக தனாகர்ஷண ஹோமம் செய்ய வேண்டும். வட இந்தியாவில் தனலட்சுமி பூஜை மற்றும் ஹோமத்தை தீபாவளி சமயத்தில் செய்து வழிபடுகின்றனர். தாம் சேர்த்த பணம், பொன் போன்றவை அனைத்தையும் பூஜையில் வைத்து வழிபடுவர். - Advertisement - தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த தினத்தில் இந்த தனாகர்ஷண ஹோமத்தைச் செய்வது சிறப்பு. விடியற்காலையில் குளித்து முடித்துவிட்டு, சுத்தமான அணிந்து கொண்டு, நெற்றிக்கு குங்கும திலகமிட்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும். சங்கல்பம் செய்து கொள்ளவும் பிறகு நம் செல்வத்தையெல்லாம் ஒரு குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்யவும் வட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும், தேவதா ஆஜ்யபாகம், சமிதா தானம் செய்யவும்.

பிறகு சுத்தமான பசு நெய், தாமரைப்பூ, தங்கக் காசு, சர்க்கரை பொங்கல் மூலம் 108 ஆவர்த்தி ஹிரண்யவர்ணா என்ற தேவ மந்திரம் உச்சாடனம் செய்து ஹோமம் செய்யபடும். அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யபடும். சொக்கத் தங்கம், பட்டு முதலியவற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹீதி செய்து ஹோமம் பூஜை நிறைவு செய்யப்படும். கற்கண்டு பாலுடன் செய்த பொங்கல் நைவேத்யம் செய்து, மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டு தனாகர்ஷண ஹோமம் நிறைவு பெறும். முற்காலத்தில் கேரள தேசத்தில் தங்கத்தை உருக்கி ஹோமத்தீயில் நெய்போல் விட்டு இந்த ஹோமம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பூஜை செய்யப்பட்ட சுவர்ணலட்சுமி குடத்தை எடுத்துக் கொண்டு, பிரசாதத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தன ஆகர்ஷன ஹோமம் செய்வதால் வீட்டில் லட்சுமி குடி புகுந்து செல்வச் செழிப்பு அருள்வாள் என்கிறது வேதம். இந்த ஹோமம் முக்கியமாக தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபங்களையும், தொழில் விருத்தியையும் ஏற்படுத்தவல்ல ஆற்றல் வாய்ந்த ஒரு ஹோம பூஜையாக இருக்கிறது. பணம், பொன் போன்றவற்றின் சேர்க்கை அதிகம் உண்டாக விரும்புபவர்கள் இந்த ஹோமத்தை செய்வது நல்ல பலன் அளிக்கும். வசதியான வீடு, வாகனம் மற்றும் சொத்துக்களின் பெருக்கத்தையும் இந்த ஹோம பூஜை ஏற்படுத்தும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

 • thai_ammamam

  தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

 • mouni_amavaaa1

  வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்