SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்திர கிரகணம் இன்று!: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு

2019-07-16@ 10:14:03

விண்வெளி என்பது பல அதிசயங்கள் நிறைந்த ஒரு இயற்கை அதிசயம் ஆகும். விண்வெளிக்கும், இறைவனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அது என்னவென்றால் இந்த இரண்டின் தோற்றம் மற்றும் முடிவை எவராலும் அறிய முடியாது. எனவே தான் சைவர்கள் சிவபெருமானை பஞ்ச பூதங்களில் ஆகாயத்துடன் தொடர்புபடுத்தி, சிதம்பரத்தில் நடராஜ பெருமானாக வழிபடுகின்றனர். இப்படி பல அற்புதங்கள் கொண்டிருக்கும் விண்வெளியில் வருடத்திற்கு ஒருமுறை அல்லது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்ற அதிசயம் கிரகணங்கள் ஆகும். கிரகணங்களில் சூரியகிரகணம், சந்திரகிரகணம் என இரண்டு வகைகள் உள்ளன. இதில் சந்திர கிரகணம் ஏற்படும் போது நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இன்று இரவு சுமார் 01.32 மணி முதல் நாளை அதிகாலை 04.30 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த சந்திர கிரகணம் பௌர்ணமி திதி, உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் தொடங்குகிறது. கர்ப்பிணி பெண்கள், வயதானோர், நோயுற்றவர்கள், குழந்தைகள் போன்றோர்களுக்கு கிரகண தீட்டு காலம் இரவு 10.02 மணிக்கு துவங்குவதால் அவர்கள் அதிகம் வெளியில் நடமாடாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தபடி தெய்வ மந்திரங்களை துதித்து வழிபடுவதில் கிரகண தோஷத்திலிருந்து விடுபடலாம்.

சந்திர கிரகணம் ஆரமிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பில் இருந்து எதையும் உண்ணக்கூடாது. வீட்டில் ஏதேனும் உணவை சமைத்து வைத்திருந்தால் அதில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். கிரகணம் முடிந்து குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே உணவருந்த வேண்டும். கிரகணம் ஏற்படும் சமயத்தில் கோவில்கள் அனைத்தும் மூடி இருக்கும். ஆகையால் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யலாம், இறைவனின் நாமத்தை ஜபித்தவாறு இருக்கலாம். சந்திர கிரகண காலத்தில் நாம் செய்யும் மந்திர ஜபங்கள் நமக்கு அளவற்ற பலன்களைத் தரும். அப்போது நாம் செய்யும் மந்திர ஜபம் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன்களை கொடுக்க வல்லதாக இருக்கிறது.

குறிப்பாக உபநயனம் செய்விக்கப்பட்டு பிரம்மோபதேசம் செய்விக்கப் பட்டவர்கள் கண்டிப்பாகக் கிரகண காலத்தில் மந்திர ஜபம் செய்ய வேண்டும். மேலும் சந்திர கிரகண காலம் காயத்ரி மந்திரம் ஜபம் செய்வதற்கு உகந்த நேரமாக இருக்கிறது. பெண்கள் உள்பட மற்றவர்கள், தங்கள் குருநாதர் மூலம் மந்திரோபதேசம் பெற்றிருந்தால் அந்த மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ஜபம் செய்யலாம். அப்படி மந்திர உபதேசம் பெறாதவர்கள், இறைவழிபாடுகளில் ஈடுபடலாம். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்ற தெய்வப் பாடல்களை பாராயணம் செய்யலாம். அல்லது, ‘ஓம் நமசிவாய’, ‘ஓம் விஷ்ணவே நம:’, ‘ஓம் நாராயணாய நம’ என்ற நாமாவளிகளை ஜபிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

 • thai_ammamam

  தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

 • mouni_amavaaa1

  வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்