SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் ராகு பகவான்

2019-07-15@ 10:13:59

நவக்கிரகங்களில் மற்ற கிரகங்களை காட்டிலும் நிழற்கிரகங்களான ராகு மற்றும் கேது மனிதர்களின் வாழ்வில் தீவிர தாக்கத்தை செலுத்தவல்லதாக இருக்கின்றன. இதில் ராகு கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில், அவருக்கு மிக சிறப்பான யோகங்கள் ஏற்படும். அதே நேரம் அந்த ராகு பாதகமான நிலைகளில் இருந்தால் பல்வேறு கஷ்டங்களும், துயரங்களும் உண்டாகும். அதில் ராகு கிரக தோஷத்தால் குழந்தை பாக்கியம் கிட்டாத ஒரு அவல நிலையும் உண்டாகிறது. அப்படிப்பட்ட ராகு கிரகத்தின் பாதகமான தோஷங்களை நீக்கி நன்மக்கட் பேறு உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்குமானால் அந்த ஜாதகத்திற்குரிய நபர் ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் முற்பிறவியில் கோயில் பாம்புகளை அடித்து கொன்றதாலும், கோயிலை சுற்றியிருந்த பாம்பு புற்றுகளுக்கு தீ வைத்ததாலும் அந்த நாக பாம்புகளின் சாபத்தை பெற்று இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உண்டாகியிருப்பதை அறியலாம். ஜாதகத்தில் ராக கிரகம் காரணமாக தான் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து ராகு பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.

200 கிராம் தோல் நீக்காத உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை சமபாகமாக பிரித்து, ஒரு வெள்ளை நிற துணியை ஒன்பது துண்டுகளாக வெட்டியெடுத்து, பிரித்து வைத்த ஒவ்வொரு பங்கு உளுந்தையும் ஒன்பது துணிகளில் போட்டு முடிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒன்பது துணி முடிப்புகளையும் உங்கள் வீட்டு பூஜையறையில் சாமி படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். பூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன்  மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.

மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, ராகு பகவானை மனதில் நினைத்து “ராகு பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும்” என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன்  மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது உளுந்து தானியங்கள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு சனி கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக ராகு பகவான் அருள் புரிவார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்