SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-07-13@ 10:23:49

ஜூலை 13 - சனி. வைஷ்ணவ ஏகாதசி. ஸ்ரீ வாசுதேவத் துவாதசி. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை. வேளூர் வைத்யநாதசுவாமிக்கும் ஆச்சாள்புரம் ஸ்ரீசிவலோக தியாகராஜசுவாமிக்கும் ஸம்வத்ஸராபிஷேகம். சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மாதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 14 - ஞாயிறு. சதுர்த்தசி. பழநி ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீ ரங்கம் ஜேஷ்டாபிஷேகம். திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் தாரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 15 - திங்கள்.  அருணகிரியார்(அடியவர்). திருஆவினன்குடி அன்னாபிஷேகம் காரைக்கால் மாங்கனி திருவிழா. சுக்லபட்ச மஹாபிரதோஷம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் த்ருதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 16 - செவ்வாய். பௌர்ணமி. சாதுர்மாஸ்ய விரதாரம்பம். வியாஸ பூஜை. வேளூர் சீதளகும்பம் பூர்த்தி, பழநி ஊர்க்கோயில், பழநி பெரிய ஆவுடையார் கோயில் அன்னாபிஷேகம். சந்திர கிரகணம். ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் கலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 17, புதன் - பிரதமை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள். திருக்கோயிலில் ஸ்ரீ நரசிம்மமூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஆஷாட பஹூள ப்ரதமை, ஆடிப்பண்டிகை தக்ஷிணாயன புண்யகாலம். ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர்  மங்களாம்பிகை லட்சார்ச்சனை. ஆடிப்பண்டிகை, திருக்கடையூர், திருப்பறியலூர் ஸ்ரீவீரட்டேசுவர சுவாமிக்கும் திருக்குவளை ஸ்ரீ தியாகராஜசுவாமிக்கும் அபிஷேகம். புதுக்கோட்டை அவதூத சதாசிவாள் ஆராதனை, கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சிவ தாரிணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 18, வியாழன் -  துவிதியை. திருவோண விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் அம்ருதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.    
ஜூலை 19, வெள்ளி - திரிதியை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. வேளூர், சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு தலங்களில் ஸ்ரீஅம்பாளுக்கு சந்தனகாப்பும், நவசக்தி அர்ச்சனையும் நடைபெறும். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஊர்வசி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் ஸ்ரீ மேலதிரட்டு சுடலைமாட சுவாமி கோயிலில் திருவிழா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்