SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோபத்தையும் ஆசைகளையும் கட்டுப்படுத்து

2019-07-12@ 17:11:09

கிறிஸ்துவம் காட்டும் பாதை

ஒரு அரசன் வேட்டைக்குப் போன சமயத்தில் வழிதவறிப் போனார். கூடவே காவல் வீரர், அமைச்சர் ஆகியோர் இருந்தார்கள். வெகுநேரம் அடர்ந்த காட்டில் வழி தேடி அலைந்தவர்கள் ஒரு துறவியின் குடிசை இருப்பதைப் பார்த்தார்கள். அரசர் முதலில் காவல் வீரனை அனுப்பி துறவியிடம் வழி கேட்டு வரச்சொன்னார். தவம் செய்துகொண்டிருந்த துறவியின் முன்சென்று அவன் வழி கேட்டான். அவர் கண்களைத் திறக்காமலே, ‘‘ஏ! காவல் வீரனே, இங்கே இருந்து இடதுபுறம் சென்றால் பாதை வரும்’’ என்றார். அவர் கண்களைத் திறக்காமலே அவனைக் காவல் வீரன் என்று அறிந்தது எப்படி? என்று வியந்த மன்னர் உடனே அமைச்சரை அனுப்பினார். அவர் சென்று வழிகேட்க அப்போதும் கண்களைத் திறக்காமலேயே, ‘‘அமைச்சரே! சற்று முன்பு காவல் வீரன் வழி கேட்டான். இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்! என்றவர் வழியைச் சொன்னார்.

மன்னருக்கு ஆச்சரியம் தாளவில்லை. மேலும் கொஞ்ச நேரம் கழித்து தானே சென்று வழி கேட்டார். ‘‘மன்னா! என்னை சோதிப்பதற்காக வந்திருக்கிறீர்களா?’’ கண்களைத் திறக்காமலேயே எப்படி உங்களை அறிந்தேன் என்பதுதான் உங்கள் சந்தேகமே! அது எனது கண்டுபிடிப்போ, சாதனையோ அல்ல, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை வெளிப்படுத்திக்கொண்ட விதம்தான் உங்களை யார் என்று எனக்கு உணர்த்தியது. முதலில் வந்த வீரனின் வார்த்தைகளில் பணிவு இல்லை. அடுத்து வந்த  அமைச்சரின் குரலில் அதிகாரத்தொனி இருந்தது. இப்போது உம்மிடம் பணிவும், பண்பும் தென்பட்டது என்றார் துறவி.

உங்கள் அணுகுமுறையும், நீங்கள் அனுமதிப்பதையும் சார்ந்தே ஒருவர் உங்களைத் தாழ்வாகவும், உயர்வாகவும் நடத்த முடியும் என்பதை உணருங்கள். அப்படிச் செய்தால் உங்களுக்குரிய அங்கீகாரம் நிச்சயம் கிட்டும். வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியும் மலரும்.‘‘இவற்றை நீ நினைவிற்கொள்வாய்  நீ என் ஊழியன். நான் உன்னை உருவாக்கினேன். நான் உன்னை மறக்க மாட்டேன். உன் குற்றங்களைக் கார்மேகம்போலும், உன் பாவங்களைப்  பனிப்படலம் போலும் அகற்றி விட்டேன். என்னிடம் திரும்பி வா! நான் உனக்கு மீட்பளித்து விட்டேன். வானங்களே! மகிழ்ந்து பாடுங்கள். ஆண்டவர் இதைச் செய்தார். மண்ணுலகில் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள், மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள். ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார். இஸ்ரேயலில் அவர் மாட்சி பெறுகிறார். கருப்பையின் உள்ளே உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே. அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே,  யார் துணையுமின்றி, நானாக வானங்கனை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.

பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்ேறன். மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன். ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையென்று காட்டுகின்றேன். என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்.  என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்.’’ - (ஏசாயா 44: 21-26)கோபம், பொறாமை, ஆசைகள் ஆகியவற்றைக் கட்டுப்படு–்த்து. அடுத்தவர் பற்றி புறம்பேசும் பழக்கத்தை அடியோடு நிறுத்தி விடு. எல்லாமே வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடக்கட்டும். எந்த வேலையானாலும் நீ போய் முதல் ஆளாய் நின்னு செய். மற்றவர்கள் உன்னைப் பின்தொடர்வார்கள். அதை விட்டுவிட்டு அதிகாரத் தோரணையில் கட்டளை இட்டுக்கொண்டிருந்தால் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்.‘‘கடலின் ஆழத்தை அளக்கச் சென்ற உப்பு பொம்மை மீண்டும் வந்து கடலின் ஆழத்தைச் சொல்ல முடியாது.

- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-09-2019

  23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்