SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வித்தைகள் அருளும் விசாலாட்சி தேவி

2019-07-11@ 10:15:11

வாரணாசி மணிகர்ணிகா

காசி ‘முக்தித் தலம்’ என்றழைக்கப்படும். உத்திரப் பிரதேசத்திலுள்ள இத்திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இவ்வூரை வாரணாசி, பனாரஸ் என்றும் அழைப்பர். விஸ்வநாத ஸ்வாமியும் (12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று) விசாலாட்சி அன்னையும் ஆட்சி செய்யும் இப்பீடத்தில் தங்கள் உயிர் பிரிவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்,  இங்கு வரும் அன்பர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இந்த க்ஷேத்திரத்தை புண்ணியத் தலமாகக் கருதி வணங்கி அருள் பெறுகின்றனர்.

இவ்வூரில் கொலுவிருக்கும் அன்னை விசாலாட்சி ஆன்மா பிரியும் தருணத்தில் உள்ளவர்களை தன் மடி மீது கிடத்தி முந்தானையால் வீசுவதாகவும், விஸ்வநாதர் இவர்கள் காதில் ராம நாமத்தை உச்சரிப்பதாகவும் ஐதீகம். கணக்கற்ற கோயில்களைக் கொண்ட இந்நகரத்தில் உள்ள டுண்டி கணபதி ஆலயம், ஸ்ரீகேதாரேஸ்வரர், சைலபுத்ரி, ப்ரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆலயங்கள் புகழ் பெற்றவை. இந்த காசி மாநகரில் நடைபெறும் நவராத்திரி விழா மிகவும் விமரிசையானது.

இந்த அன்னையர்களை  வணங்குபவர்களுக்கு கவலைகள் நீங்கி, வேண்டுவன அளிக்கின்றாள் அன்னை விசாலாட்சி. பராசக்தி பல வடிவங்கள் கொண்டு பக்தர்களைக் காக்கிறாள். முப்பெருந்தேவிகளாக துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி போன்றோர் கல்வி, செல்வம், வீரம் போன்றவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றனர். அதுபோல எல்லா உயிர்களுக்குமே உணவளித்து வறுமைப் பிணியிலிந்து காப்பதையே தன் கடமையாகக் கருதும் அம்பிகையே அன்னபூரணியாக அவதரித்து காசி மாநகரில் திருவருள் புரிந்து வருகிறாள்.

இது தேவ பூமி என்றும் கருதப்படுகிறது. இந்த க்ஷேத்திரத்தில் உச்சரிக்கப்படும் மந்த்ரங்கள் அனைத்தும் ஸித்தியைத் தரவல்லது.இந்த பீட நாயகியான விசாலாட்சி அன்னையை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. சக்திபீடமாகத் திகழ்கின்ற அன்னை விசாலாட்சி திருக்கோயில், தென்னிந்திய கோயிற் பாணியில் அமைந்துள்ளது. தன்னை அன்புடன் வணங்கி வழிபட வருவோரின் விசனங்களையெல்லாம் போக்கி, வேண்டுவனவற்றை அருளும் திருநோக்குடன் எழுந்தருளியிருக்கிறாள். இந்த சக்திபீடத் தலத்தில் கங்கைக் கரையோரத்தில் நீராடுவதற்கென்று 64 படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

‘மணிகர்ணிகா காட்’ என்ற படித்துறையில் அன்னை அருட் பாலிப்பதால் இது மணிகர்ணிகை பீடத்தலமாகவும் வழங்கப்படுகிறது. முக்தித்தலமான காசியில் பக்தர்களுக்கு அருள் செய்ய அழகுடன் மணிகர்ணிகா பீடத்தில் அமர்ந்தவள். எல்லாத் திசைகளில் உள்ளவரும் போற்ற ஒருமித்த உள்ளத்தோடு சத்திய சாதனையை விளக்க சாந்த வடிவத்தோடு காட்சி தருபவள். முக்திப்பேற்றை தரும் விஸ்வநாதரின் மனம் மகிழ நித்யகல்யாணியாய், குணம் கடந்த தத்துவமாய், நிகரற்று விளங்கும் நின் அற்புத ஆற்றலை உன் அருள் பெற்ற சித்தர்களாலும் கூற இயலுமோ? உன் பெருமை இன்னதென்று எவரால் கூறிவிட இயலும்? உன் அழகைக் கண்டு களித்திடும் மனத்தூய்மை பெற்றோர் யார்? எட்டுத்திக்குகளில் உள்ளோராலும் போற்றி வணங்கப்படுபவள் இந்த விசாலாட்சி தேவி.

இறைவனிடம் நாம் பக்தி செலுத்துகிறோம். ஆனால் அந்த பக்தி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நம்பிக்கையின்றி செய்யும் எச்செயலும் நமக்கு நன்மை அளிப்பதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் ஆசைகள், தேவைகள். அதை நிறைவேற்றும்படி நாம் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்