SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சி வரதனை பாடுங்கடி...

2019-07-01@ 17:27:03

*கள்வனடி அவன் கள்வனடி
 கன்னியர் விரும்பும் கள்வனடி
 காஞ்சி வரதனை பாடுங்கடி
 காலம் கனிந்தது வாழ்த்துங்கடி!
 
*அகில மெல்லாம் ஒன்று திரண்டு
 காஞ்சியில் சேர்ந்தது ஏனடியோ
 அத்தி வரதன் தரிசனம் கண்டு
 கண்கள் வியந்து பூத்திடவோ!
 
*பூக்கள் திறந்தது வண்டாலோ - இல்லை
 பூவிழி கண்ணன் கண்ணாலோ
 பாக்கள் பிறந்தது சொல்லாலோ - இல்லை
 பரந்தாமன் அருள் தன்னாலோ!
 
*கன்னத்தில் தந்தான் முத்தமடி
 எண்ணத்தில் செய்தான் யுத்தமடி
 கச்சி வரதனை காட்டேடி
 கழுத்தில் மாலை சூட்டிடுவேன்!
 
*நாற்பது ஆண்டு நல்வினையால்
 அத்தி வரதனை பார்த்தேனடி!
 அனந்த தீர்த்த  துயில் நீங்கி
 ஆனந்த மண்டபம் சேர்ந்தான்டி!
 
*நெய்யுமிருக்குது பாலுக்குள்ளே - நல்ல
 மோருமிருக்குது பாலுக்குள்ளே
 மெய்யுமிருக்குது நெஞ்சுக்குள்ளே - நாம்
 மூழ்கி தவிப்பது பொய்யுக்குள்ளே!
 
*புடவை சரிந்தது ஏனடியோ - உன்
 புத்தி சரிந்தது ஏனடியோ
 பூபாலன் மனக்கிறுக்கினிலே
 பூவையும் கொண்ட கோலமிது!
     
* தள்ளாத வயதிலும் மனதினிலே
  பொல்லாத ஆசைகள் ஏனடியோ
  எல்லா ஆசையும் விட்டொழித்து
  வரதன் நினைவில் கலந்திடடி!
 
*இப்படியோ இல்லை அப்படியோ
 பெண் மனம் செல்வது எப்படியோ
 திருமங்கை ஆழ்வார் சொற்படியே
 கண்டு கொண்டேன்  வரதனை அப்படியே!
 
*ஆயிரம் கோயில் மாநகரம்
  அத்தி கிரி என்னும் திருநகரம்
  தேசிகன் துணை கொண்டிடுவோம்
  பெருந்தேவி  தாயார் மனம் வென்றிடுவோம்!

விஷ்ணுதாசன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்