SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் தரிசனம்

2019-06-29@ 11:30:58

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடைபெறும். ஆனி மாதத்தில் நடக்கும் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு மேல் கோயில் கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டனர். கொடி மரத்திற்கு நடந்த பூஜைகளுக்கு பிறகு மேள, தாளம் முழங்க உத்சவ ஆச்சார்யார் நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடி ஏற்றினார். இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பின்னர் பஞ்சமூர்த்திகள் பிரகாரம் வலம் வந்து வீதியுலா சென்றன. கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு நடராஜர் கோயிலில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து வரும் ஜூலை 3ம்தேதி (புதன்கிழமை) இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. 5ம்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு தங்க கைலாச வாகனத்திலும், 6ம்தேதி சனிக்கிழமை மாலை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வேடத்திலும் சாமி வீதியுலா செல்கிறது.

7ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய விழாவான தேர்த் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் மூலவரான ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப்பெருமான் தேரில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து தனி தனி தேர்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமசுந்தரி, ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தேரில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம்தேதி திங்கள்கிழமை அதிகாலை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜருக்கு மகாபிஷேகமும் மதியம் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. 9ம்தேதி செவ்வாய்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா செல்கிறது.விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் பாலகணேச தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்