இந்த வாரம் என்ன விசேஷம்?
2019-06-29@ 10:31:25

ஜூன் 29, சனி - கிருஷ்ணபட்ச வைஷ்ணவ ஏகாதசி. கார்த்திகை விரதம். கூர்ம ஜெயந்தி. வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகன் தங்க ரதக் காட்சி. வேளூர் கிருத்திகை, சிதம்பரம், ஆவுடையார் கோயில் உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் விசேஷ நடராஜ சிவஸ்தலங்களில் ஆனிதிருமஞ்சன உற்சவ ஆரம்பம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மஹாபாகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூன் 30 , ஞாயிறு - பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் ஸ்ரீ நந்தீஸ்வரர் வழிபாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் பிங்களாசக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 1, திங்கள் - மாத சிவாத்திரி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ஸிம்ஹிகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 2, செவ்வாய் - அமாவாசை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. திருவையாறு அமரதீர்த்தம், திருவள்ளூர் தெப்பம். (சூர்ய க்ரஹணம்) (தெரியாது). கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் அதிசங்கரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 3, புதன் - ஆஷாட சுத்த பிரதமை, இஷ்டி சாந்த்ரமான ஆஷாட மாச ஆரம்பம். சிதம்பரம், ஆவுடையார்கோவில் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி. திருவஹிந்திரபுரம் ஸ்ரீராமன் ஜேஷ்டாபிஷேகம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் லோலாக்ஷி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 4, வியாழன் - சந்திர தரிசனம். அமிர்த லட்சுமி விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் சுபத்திரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
ஜூலை 5, வெள்ளி - சதுர்த்தி ஸாவித்திரி விரத கல்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. நாகை புண்டரீகன் ஐக்கியம். சுக்லபட்ச சதுர்த்தி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் லட்சுமி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
கார்த்திகை மாத விசேஷங்கள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது