SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதரவற்றோருக்கு ஆண்டவரே அடைக்கலம்

2019-06-27@ 17:40:02

கிறிஸ்துவம் காட்டும் பாதை

இறைவனின் மகிமையும், மகத்துவமும் எல்லையற்றது. வார்த்தையின் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. வானவில்லின் அழகிய வர்ணத்தைக்கூட  வார்த்தைகளால் வர்ணிக்கலாம். ஆனால், இறைவனின் மகிமையோ எல்லா வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. அத்தகைய மகிமைக்குரிய  இறைவனே மனிதனாக இயேசு என்னும் பெயரில் உலகிற்கு வந்தார். ஒவ்வொரு உயிரின் வாழ்வும், தாழ்வும், வறுமையும், நலமும், நோயும், சுகமும்,  இறப்பும், மறுபிறப்பும் ஆண்டவரின் இயக்கமே என்பதைத்தவிர வேறென்ன? முற்றி முதிர்ந்த ஞானம் இவற்றை அடையாளம் கண்டுகொள்கிறது.  ஆண்டவரின் தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. இன்பத்தையோ, துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது.

‘‘சில நாட்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே வீட்டு  வாசலருகிலும், இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறை வார்த்தையை எடுத்தரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற  ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டு வந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை.  எனவே, அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்து திறப்பு உண்டாக்கி, முடக்கு வாதமுற்றவரை படுக்கையோடு கீழே இறக்கினர்.இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ‘‘மகனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’’ என்றார்.

அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர்கள் சிலர், ‘இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்’ என்று  இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றி  பாவங்களை மன்னிக்க யாராலும் இயலும்? என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தங்களுள் இவ்வாறு எண்ணுவதை இயேசு  நம்முன் உணர்ந்து அவர்களை நோக்கி, ‘‘உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவரிடம் ‘‘உன் பாவங்கள்  மன்னிக்கப்பட்டன என்பதா? எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’’ என்றார்? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட  மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

எனவே, அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ‘‘நான் உனக்குச் சொல்கிறேன். நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது  வீட்டுக்குப்போ’’ என்றார். அவனும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோரும் காண வெளியே சென்றார். இதனால்  அனைவரும் மலைத்துப்போய், ‘‘இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே’’ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.’’ -(மாற்கு 2: 12)கண்டாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். இவர்களுடைய உலக நோக்கு நல்லவர்களின் உலக நோக்கிலிருந்து மாறுபட்டது.ஒடுக்கப்படுவோருக்கு  ஆண்டவரே அடைக்கலம். நெருக்கடியான (வளைகளில் புகலிடம் அவரே! உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர். ஆண்டவரே!  உம்மை  நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை.நேர்மையாளன் விசுவாசத்தினால் உயிர் பிழைப்பான். விசுவாசம் உயிர் கொடுக்கும் வல்லமை  உள்ளது.
 
- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்