SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருளாதார நிலை உயர ஆனி தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு

2019-06-25@ 10:19:27

12 தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதம். தமிழ்நாட்டில் கோடை காலம் உச்சத்திற்கு செல்லும் காலமாகவும், அதே நேரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஒரு மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் தான் ஆனித் திருமஞ்சனம், காரைக்கால் மாங்கனி திருவிழா போன்ற தெய்வீக வைபவங்கள் நடத்தப்படுகின்றன. இத்தனை சிறப்பு மிக்க ஆடி மாதத்தில் வருகின்ற ஆனி தேய்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த தினத்தில் நாம் பைரவரை எப்படி வழிபடுவது என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் நாளை செவ்வாய்கிழமையில் தினத்தில் வருகிற ஆனி தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமான தினமாக இருக்கிறது.

ஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் அந்த தேய்பிறை அஷ்டமி செவ்வாய்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள்ளாக சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர் மாலை சாற்றி, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும்.

மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது. மேற்கண்ட முறையில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் விரைவில் கட்டி தீர்த்துவிட முடியும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை உயரும். வீண் செலவீனங்கள் ஏற்படாது. தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்