SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழிபாட்டில் வாழைப்பழம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

2019-06-20@ 10:45:25

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.  மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. ‘எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!’’ என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப் பழத்தை படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழை மரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.

- எஸ்.கிருஷ்ணஜா பாலாஜி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்