SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு காட்சிகள்..!

2019-06-13@ 17:06:24

இஸ்லாமிய வாழ்வியல்

காலங்கள் தோறும் இரண்டு பாதைகள் உள்ளன.! அந்த இரண்டு பாதைகளும் இரண்டு வெவ்வேறு தன்மைகளும் வெவ்வேறு காட்சிகளும் கொண்டவை.திருக்குர்ஆனின் 27-ம் அத்தியாயத்தில் இறைத்தூதரும் மாமன்னருமான சுலைமான் நபி(அலை) அவர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அதே போல் 28-ம் அத்தியாயத்தில்  மூஸா நபியின் சமுதாயத்தைச் சேர்ந்த காரூன் பற்றிக் கூறப்பட்டுள்ளது.இந்த இரண்டு அத்தியாயங்களிலும் சுவையான, விறுவிறுப்பான செய்திகளும் நிகழ்வுகளும் நிறைய உள்ளன. குறிப்பாக, இரண்டு காட்சிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

காட்சி-1

இது 27-ம் அத்தியாயத்தில் உள்ளது.சுலைமான் நபிக்கு மனிதர்கள் மீதான ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல, அதையும் தாண்டி காற்றைக் கட்டுப்படுத்துதல், பறவைகள், எறும்புகளின் மொழிகளை அறிந்து கொள்ளும் ஆற்றல்,  ஜின்கள்(ஒரு வகைப் படைப்பு) மீதான ஆட்சி என அவருடைய ஆட்சி பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருந்தது.அந்த வகையில், மிக மிக அற்புதமான முறையில் - அதாவது கண் மூடித் திறப்பதற்குள் ஸபா நாட்டு அரசியின் அரியணை தம் முன் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் சுலைமான் நபி உரக்கக் கூறினார்:“இது என் இறைவனின் அருட்கொடையாகும். நான் நன்றி செலுத்துகிறேனா, நன்றி கொல்கிறேனா என என்னை அவன் சோதிப்பதற்காக.”(வசனம்-40) மாபெரும் ஆற்றல் நிறைந்த அந்த மகத்தான ஆட்சியாளர்  இறைவனுக்கே நன்றி செலுத்தினார். அவனையே போற்றிப் புகழ்ந்தார்.
அவனுக்கே  அடிபணிந்தார்.

காட்சி 2.

இது அத்தியாயம் 28-ல் வருகிறது.மூஸா நபியின் சமுதாயத்தைச் சேர்ந்த காரூன் எனும் செல்வந்தனுக்கு வழங்கப்பட்ட செல்வம் குறித்துப் படிக்கும்போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது.அவனுடைய செல்வக் கருவூலங்கள்  குறித்து அருள்மறை கூறுகிறது.“நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோம் எனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்கமுடியும்.”(வசனம்-76)

சாவிகளைத் தூக்குவதற்கே பலசாலிகள் கொண்ட ஒரு குழுவே வேண்டும் எனில் அவனிடம் இருந்த செல்வக் கருவூலங்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்த அருட்கொடைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக அவன் ஆணவத்துடன் கூறினான்- இவை அனைத்தும் என்னிடமுள்ள அறிவினால்தான் எனக்குக் கிடைத்தன.”(வசனம்-78)இந்த ஆணவத்தை இறைவன் விரும்பவில்லை. இறைவனின் கட்டளை வந்தது. காரூனும் அவனுடைய மாளிகையும் அவனுடைய கருவூலங்களும் அப்படியே அடியோடு பூமியில் புதையுண்டுப் போயின.நன்றிக்கும் பணிவுக்கும் இலக்கணம் சுலைமான் நபி நன்றிமறத்தலுக்கும் ஆணவத்திற்கும் எடுத்துக்காட்டு - காரூன்காலங்கள் தோறும் இந்த இரண்டு பாதைகள்தான் மனிதனின் முன் உள்ளன.இப்போதும் அப்படித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் பாதையில் நடைப்போட்டு இம்மையிலும் மறுமையிலும் இறையருளைப் பெறுவோம்.

- சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்