SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழிப்பாய் இருங்கள்!

2019-05-29@ 17:29:03

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்து பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர். அவர்களுள் ஐந்து பேர்  அறிவிலிகள். ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால் தங்களோடு எண்ணெய்  எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெய்யும் எடுத்துச் சென்றனர். மணமகன்  வரக்காலந்தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தில் உறங்கி விட்டனர்.நள்ளிரவில், ‘‘இதோ! மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லோரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள், முன்மதியுடையோரைப் பார்த்து, ‘‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன’’ உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் என்றார்கள். முன்மதி உடையவர்கள், மறுமொழியாக, ‘‘உங்களுக்கும், எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம், எனவே வணிகரிடம் போய் நீங்கள் வாங்கிக் கொள்ளுவதுதான் நல்லது’’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்ற  தோழிகளும் வந்து, ஐயா! ஐயா! எங்களுக்கும் கதவைத் திறந்துவிடும் என்றார்கள். அவர் மறுமொழியாக, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.  ‘‘எனக்கு உங்களைத் தெரியாது’’ என்றார். எனவே விழிப்பாயிருங்கள். ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.’’ -  (மத்தேயு 25: 1-13)எறும்பைப் பார்த்து வெட்டுக்கிளி ஒன்று கேலி செய்தது. ‘‘நான் ஜாலியாக இருக்கிறேன். ஆனால் நீ மட்டும் எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாக உழைத்துக்கொண்டிருக்கிறாயே, உனக்கே இது அசிங்கமாக இல்லையா’’ என்று கூறி பரிகசித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் எறும்பு சோர்வின்றி உழைத்து உழைத்து தன் இருப்பிடத்தில் உணவு சேர்த்துக்கொண்டே இருந்தது.

ஒருநாள் கடும் மழை பெய்தது; காற்றும் வீசியது. அதனால் குளிரும் இருந்தது. காற்றும் மழையின் காரணமாக வெட்டுக்கிளி உணவின்றி மிகவும்  அவதிப்பட்டது. பசிக்கொடுமையோடு எறும்பைத் தேடி வந்தது. ‘எறும்பு ராஜா‘ ‘‘கொஞ்சம் வெளியில் வாருங்கள் என்று அழைத்தது. வெளியில் வந்த  எறும்பு  ராஜா என்று இங்கு யாருமில்லை. எல்லோரும் உழைப்பாளிகள்தான்’’ என்றது.வெளியில் பயங்கரமான காற்றும், மழையுமாக இருக்கிறது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் செல்லவும் முடியவில்லை. கடும் பசி வாட்டுகிறது. ஆமா! இந்த நிலையில் நீங்க எப்படி சமாளிக்கிறீங்க? என்று கேட்டது வெட்டுக்கிளி. மழைக்காலத்துக்கு முன்பு உழைத்துச் சேர்த்ததை இப்போது சாப்பிட்டு ஓய்வாக நிம்மதியாக இருக்கிறேன் என்றது எறும்பு ராஜா.உங்கள் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று வெட்டுக்கிளி கெஞ்சியது. உன்னை எங்கள் கூட்டத்தில் சேர்ப்பதா? முடியவே முடியாது. எங்கள் சுறுசுறுப்புக்கு நீ ஈடு கொடுக்க மாட்டாய் என்று கூறி எறும்புராஜா மறுத்து விட்டார்.‘‘சோம்பேறிகள் மாசு படிந்த கல் போன்றவர்கள். அவர்களது இழிவு கண்டு எல்லோரும் எள்ளி நகையாடுவர். சோம்பேறிகள் குப்பை மேட்டுக்கு  ஒப்பானவர்கள். அதைத் தொடுவோர் அனைவரும் கையை உதறித்தட்டி விடுவர்.’’ - சீராக் 22: 1-2

- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்