SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எள்ளு சாதம்

2019-05-29@ 10:41:36

தேவையான பொருள்கள்

பச்சரிசி - 1 கப்
எள் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை


பச்சரிசியை உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவும். படபடவென பொரியும் போது எடுத்து வைக்கவும். அடுத்து அதே கடாயில் எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு மிளகாயை வறுத்து, எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். (சிறிதளவு உப்பு மட்டும்- அரைபடுவதற்காக) மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அடுத்து அதில் உதிரியாக வடித்த சாதத்தை கொட்டி, தேவையான உப்பு, எள் பொடியைத் தூவிக் கலந்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்