SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-05-10@ 15:27:12

மே 11, சனி - சப்தமி. சஷ்டி விரதம். காஞ்சி ஸ்ரீகந்தகோட்டம் தேவேந்திர மயில், வேதாரண்யம் அகஸ்திய காட்சி. மதுரை ஸ்ரீகூடலழகர் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் தெற்கு ரத வீதியில் தேரோட்டம். ஸ்ரீசிவஞான சுவாமி நாயனார் குருபூஜை. ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்க புன்னை மர வாகனத்தில் திருவீதிவுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஜெயா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 12,  ஞாயிறு - திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கல்யாணம். பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம். காளையார்கோவில் ஸ்ரீஅம்பாள் கதிர் குளித்தல், தபசுக் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் கமலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 13, திங்கள் - வைகாசி விசாகப் பெரு விழாவில் சகோபுரக் காட்சி. இரவு முத்துச் சப்பரத்தில் தேர்த்தடம் பார்த்தல். மின்விளக்கு அலங்காரத்துடன் பவனி. திருப்பத்தூர், திருத்தணிநாதர், காளையார் கோவில் சிவபெருமான் திருக்கல்யாண வைபவம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ருத்ராணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 14, செவ்வாய் - தசமி. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல், மானாமதுரை நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை. இரவு வெள்ளி ரிஷபவாகன சேவை. வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி. வாசவி ஜெயந்தி. காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் உற்சவாரம்பம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் காளி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 15, புதன் - ஏகாதசி. திருவையாறு மாதப் பிறப்பு தீர்த்தம். தருமை ஞானபுரீஸ்வரர் ரிஷபத்வஜாரோகணம். சமயபுரம் பஞ்சபிராகார உற்சவம், நாகை காரோணர் தேரோட்டம். கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோடை உற்சவம் முதல் நாள். குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கல்யாணம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மஹாதேவி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 16, வியாழன் - துவாதசி. சுக்லபட்ச மஹாபிரதோஷம். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் அப்பன் சந்நதிக்கு எழுந்தருளி தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல். பழனியாண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஜலப்ரபா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 17, வெள்ளி - திரயோதசி. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் நகர் விரிவு லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வேள்வி அபிஷேகம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் கபிலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-11-2019

  22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • watervapormoon

  வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

 • kuwaitcamelRace

  குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

 • amazonTraders

  Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

 • dubaiairshow2019

  துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்