SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகாசி மாத விசேஷங்கள்

2019-05-09@ 14:36:33

வைகாசி 1, மே 15, புதன் - ஏகாதசி. திருவையாறு மாதப் பிறப்பு தீர்த்தம். தருமை ஞானபுரீஸ்வரர் ரிஷபத்வஜாரோகணம். சமயபுரம் பஞ்சபிராகார  உற்சவம், நாகை காரோணர் தேரோட்டம். கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோடை உற்சவம் முதல் நாள். குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மனுக்கு  காப்பு கட்டுதல், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கல்யாணம். விஷ்ணுபதி புண்ணிய காலம். உத்தமர்கோவில் சிவபெருமான்  திருக்கல்யாணம். வீரபாண்டி கௌமாரியம்மன் விடாயாற்று உற்சவம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மஹாதேவி சக்திபீட  விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 2, மே 16, வியாழன் - துவாதசி. சுக்லபக்ஷ மஹாபிரதோஷம். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் அப்பன் சந்நதிக்கு எழுந்தருளி தவழும் கண்ணன்  திருக்கோலமாய் காட்சியருளல். பழனி யாண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம்  ஜலப்ரபா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 3, மே 17, வெள்ளி - திரயோதசி. முடிகொண்டானில் ஆலங்குடி பெரியவா ஆராதனை. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி. மாயவரம், திருவாடானை  நயினார்கோவில், திருப்பத்தூர், உத்தமர்கோவில், திருப்புகலூர் காளையார்கோவில் ஆகிய கோயில்களில் தேரோட்டம். பழனியாண்டவர் திருக்கல்யாண  வைபவம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் கபிலா  சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 4, மே 18, சனி - பெளர்ணமி.வைகாசி விசாகம். புத்த பூர்ணிமா.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பால்மாங்காய் நைவேத்யம். வேளூர்  வசந்தோற்சவம் பூர்த்தி, சீர்காழியில் ஸ்ரீசம்பந்தருக்கு ரக்ஷாபந்தனம். காஞ்சி ஸ்ரீகந்தகோட்டம் ஸ்ரீஷண்முகர் ரதம், தீர்த்தவாரி. ஸ்ரீ ரங்கம் ஏகவசந்தம்  சாற்றுமுறை. ராமேஸ்வரம் வசந்த உற்சவ பூர்த்தி, பழநி தேர், கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி தெப்பம்.  அர்த்தநாரீஸ்வர விரதம். சம்பத் கெளரி விரதம்.  கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் முகுடேஸ்வரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 5, மே 19, ஞாயிறு - பிரதமை. காஞ்சி ஸ்ரீமகாபெரியவாள் ஜெயந்தி. காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி வசந்த உற்சவ சாற்றுமுறை, சேலையூர்  ஸ்ரீமத் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஆராதனை. மதுரை கூடலழகர் உபய நாச்சியார்களுடன் தேரோட்டம். காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான்  திருக்கல்யாண வைபவம். மதுரை ஸ்ரீகூடலழகர் உபய நாச்சியார்களுடன் ரதோற்சவம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம்  குமாரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 6, மே 20, திங்கள் - துவிதியை. ஆச்சாள்புரம் ஸ்ரீதோத்திர பூர்ணாம்பிகா சமேத ஸ்ரீ திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம். திருக்கண்ணபுரம்  செளரிராஜப் பெருமாள் விடாயாற்று உற்சவம். திருமஞ்சன சேவை. அரியக்குடி ஸ்ரீனிவாசப்பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.கண்ணந்தாங்கல்  ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் லலிதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 7, மே 21, செவ்வாய் - திரிதியை. தஞ்சை முத்துப்பல்லக்கு, தருமை ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாணம். திருவாப்பாடி இரவு 63வர்.  திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மாகேசுவர பூஜை. வைகாசி மூலம். திருஞானசம்பந்தர், திரு நீலநக்க நாயனார்,  திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். காரைக்குடி கொப்புடையம்மன் தேரோட்டம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில்  புறப்பாடு கண்டருளல். முருக நாயனார் குருபூைஜ.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மங்களா சக்திபீட விசேஷ அபிஷேக  ஆராதனை. ஹோமம்.

வைகாசி 8, மே 22, புதன் - சங்கடஹரசதுர்த்தி. திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் கோயிலில் சைபர் ஸ்வாமிகள் ஜெயந்தி. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி  அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம். காரைக்குடி கொப்புடையம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. மதுரை கூடலழகர் கருட வாகனத்தில்  திருவீதியுலா. தருமபுரி ஸ்ரீஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் விமலா  சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 9, மே 23, வியாழன் - பஞ்சமி. தருமை திருத்தேர். திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் வருஷாபிஷேகம். தருமபுரி ஸ்ரீஞானபுரீஸ்வரர், காஞ்சி  ஸ்ரீதேவராஜஸ்வாமி மகா ரதோற்சவம். சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு திருத்தேர். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து  வைரவேல் தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் உத்பலாக்ஷி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 10, மே 24, வெள்ளி - கிருஷ்ணபக்ஷ சஷ்டி. தருமை 26வது சந்நிதானம் காவிரியில் திருமஞ்சனமாடி குருமூர்த்த வழிபாடு. ஸ்ரீபாம்பன்  சுவாமிகள் குருபூஜை. திருவோண விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மஹோத்பலா சக்திபீட விசேஷ அபிஷேக  ஆராதனை. ஹோமம்.

வைகாசி 11, மே 25, சனி - சஷ்டி. தருமை ஞானபுரீஸ்வரர் கோயிலில் 108 சிவபூஜை புரிதல். பகல் ஆதீன 26வது குரு மஹாசந்நிதானம் பட்டினப்  பிரவேசம். வடலூரில் சத்திய தருமசாலை தோற்றுவித்த நாள். மன்னார்குடி ஸ்ரீபெரியவா ஜெயந்தி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்  திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கண்ணந்தாங்கல்  ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் அமோகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 12, மே 26, ஞாயிறு - சப்தமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை.  கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் பாடலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 13, மே 27, திங்கள் - அஷ்டமி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.  சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் நாராயணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 14, மே 28, செவ்வாய் - நவமி. காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் பெரியநாயகியம்மன் திருத்தேர். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர  நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ருத்ரஸுந்தரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 15, மே 29, புதன் - தசமி. அக்னி நக்ஷத்திர நிவர்த்தி. தத்தாத்ரேய ஜெயந்தி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை விஸ்வரூப தரிசனம்  செய்ய நன்று. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் விபுலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 16, மே 30, வியாழன் - ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர்,  ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் கல்யாணி சக்திபீட  விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 17, மே 31, வெள்ளி - துவாதசி. பிரதோஷம்.  திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.  கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஏகவீரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 18, ஜூன் 1, சனி - திரயோதசி. மாத சிவராத்திரி.  திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி  ஆலய 108 சக்திபீடம் சந்த்ரிகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 19, ஜூன் 2, ஞாயிறு - சதுர்த்தசி. கிருத்திகை. வேளூர் மண்டலாபிஷேகம். கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.  வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரதக் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ரமணா சக்திபீட  விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 20, ஜூன் 3, திங்கள் -அமாவாசை. திருவையாறு அமரதீர்த்தம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி  புறப்பாடு. ஏரல் ஸ்ரீ அருணாசல
சுவாமிகள் திருவிழா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் யமுனா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 21, ஜூன் 4, செவ்வாய் - பிரதமை. மதுராந்தகம் கோடை உற்சவ ஆரம்பம். சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்  கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் கோடவீ சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை.  ஹோமம்.

வைகாசி 22, ஜூன் 5, புதன் - துவிதியை. ஸ்ரீமத் ஆண்டவர் ரங்கராமானுஜ மகா தேசிகன் திருநட்சத்திரம். ரம்பாத் திரிதியை. மாதவி விரதம். சிவகாசி  விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சுகந்தா சக்திபீட விசேஷ அபிஷேக  ஆராதனை. ஹோமம்.

வைகாசி 23, ஜூன் 6, வியாழன் -  திரிதியை. சதுர்த்தி விரதம்.  தஞ்சாவூர், செந்தலை, திருவிடைமருதூர் வைகாசப் பெருவிழா ஆரம்பம்.  ஸ்ரீசங்கரநாராயண பரப்பிரம்ம ஜெயந்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.  கதலீ கெளரி விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் த்ரிஸந்த்யா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 24, ஜூன் 7, வெள்ளி - சதுர்த்தி. திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் வசந்த உற்சவ ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப்  பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. சங்கரன்கோயில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை  தரிசனம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ரதிப்ரியா
சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 25, ஜூன் 8, சனி - பஞ்சமி. சஷ்டி விரதம். திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர் ஸ்ரீமத் அருணந்திதம்பிரான் சுவாமிகள் மாகேசுவர பூஜை.  திருவள்ளூர் வசந்த உற்சவ அங்குரார்ப்பணம். திருமாகாளம் சோமயாஜி யாகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பூச்சப்பரத்திலும், சுவாமி அன்ன  வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் திருவீதியுலா. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. அரண்ய கெளரி விரதம்.  கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சுபானந்தா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 26, ஜூன் 9, ஞாயிறு - சப்தமி. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பெரிய ரிஷப வாகனம், அம்பாள் தபசுக் காட்சி.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி
ஆலய  108 சக்திபீடம் ருக்மிணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 27, ஜூன் 10, திங்கள் - அஷ்டமி. சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் உற்சவாரம்பம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. கண்ணந்தாங்கல்  ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் நந்தினி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 28, ஜூன் 11, செவ்வாய் - நவமி. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் தேரோட்டம். இரவு பூச்சப்பரத்தில் பவனி வரும் காட்சி. கீழ்த்திருப்பதி  ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108  சக்திபீடம் ராதை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 29, ஜூன் 12, புதன் - தசமி. திருவிடைமருதூர் திருக்கல்யாணம். மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம். சோழவந்தான் ஜனக  மாரியம்மன் யாளி வாகனத்தில் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் தீர்த்தம். இரவு ரிஷபவாகன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய   108 சக்திபீடம் தேவகி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 30, ஜூன் 13, வியாழன் - சுக்லபக்ஷ சர்வ ஏகாதசி. மைசூர் சத்குரு ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள் ஜெயந்தி. மதுராந்தகம்  ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி புறப்பாடு. சோழவந்தான் ஜனக மாரியம்மன் கமலாசனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார்  கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் பரமேஸ்வரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை.  ஹோமம்.

வைகாசி 31, ஜூன் 14, வெள்ளி - துவாதசி. சுக்லபக்ஷ மஹாபிரதோஷம். மதுராந்தகம் கருடசேவை. சில தலங்களில் வைகாசி விசாகம். திருத்தங்கல்  ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் காமதேனு  வாகனத்தில் திருவீதிவுலா.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சீதாதேவி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

வைகாசி 32, ஜூன் 15, சனி - திரயோதசி. நம்மாழ்வார் திருநட்சத்திரம். ஷடசீதி புண்ணிய காலம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம்  ஸ்ரீநம்பெருமாள் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் விந்த்ய வாஸினி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை.  ஹோமம்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்