SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்!

2019-05-07@ 16:52:04

கிறிஸ்தவம் காட்டும் பாதை

எதுவும் இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அது அதிசயம். ஆனந்தம். எல்லாம் இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அது அலட்சியம். காரியங்களை முன்னேற்றுவதில்தான் காலங்கள் கனிகின்றன. நம் காரியங்களை முன்னேற்றி காலங்களைக் கனியச் செய்ய இறைவனின் கருணையும் இரக்கமும் இருக்க வேண்டும். நம்மை அழகுபடுத்த எண்ணுகிறோம். ஆனால் ஆரோக்கியத்தை மறந்துவிடுகிறோம். இனிமேல் நம் உடலும் மனமும், ஆரோக்கியம் பெற இரக்கத்தை இதயத்தில் அனுதினமும் ஈன்றெடுப்போம். இது அடுத்தவரின் உடலும் மனமும் நாம் பெறவும் உதவும்.‘‘கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும், பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தரவேண்டாம். மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்.

கடவுள் வடிவில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி எப்பெயருக்கும் ேமலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.நீங்கள் அச்சத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள். ஏனெனில் கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார். முணுமுணுக்காமலும் வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாக கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்.

உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். - (பிலிப்பியர் 2: 1-15)துறவியர் வாழும் ஆசிரமம் அது. நான்கு துறவிகளுக்குள் ஒரு போட்டி. ஒருநாள் முழுதும் யார் பேசாமல் இருப்பது என்று. ஒரு அறையில் அமர்ந்து, போட்டியில் எப்படியும் வென்றுவிட வேண்டுமென்று முடிவோடு முயற்சி செய்தனர். மாலையானது, முயற்சியில் முனைப்போடு முன்னேறினர். இரவு எட்டு மணி அளவில் மின்சாரம் தடைப்பட்டது. உடனே மெழுகுத்திரி ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட மெழுகுத்திரி அணைந்தபோது, ஒரு துறவி ‘‘வேறு மெழுகுத்திரி இருக்கா?’’ என்று பேசிவிட்டார். மற்றொரு துறவி, ‘‘அதுதான் இப்போது அவசியமா?’’ என்று பேசிவிட்டார். மூன்றாமவர், ‘‘அவர் கேட்டால் நீ ஏன் கோபப்படுகிறாய்?’’ என்று கேட்டு தன் அமைதியைக் கலைத்து விட்டார் நான்காவது துறவி. ‘‘நீங்கள் மூவரும் பேசிவிட்டீர்கள்’’ என்று உரக்கக் கத்தி தனது அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
அமைதியான வாழ்க்கைக்கு அனைவரும் ஆசைப்பட்டாலும் அடைவதில் ஆயிரம் சிரமங்கள் அடங்கியுள்ளன. அமைதி என்பது வெறும் மௌனம் அல்ல. அமைதி உள் மனதைச் சார்ந்தது. மௌனம் வெளியுற வாழ்வோடு தொடர்புடையது. அமைதி அனைத்து துன்பங்களையும், வேதனைகளையும், அவநம்பிக்கைகளையும் அகற்றி புது உணர்வோடு உதயமாகும் ஆழமான நிறைவு.

- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ilavarsar_pakisthn111

  பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

 • kavan_manavai11

  அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

 • seuol_expooo1

  தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

 • pumbkin_comp111

  அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

 • bday_day11

  ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்