SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எப்போதெல்லாம் என்னை நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்

2019-04-25@ 09:44:33

பாபா நன்றியுள்ள நினைப்பை, மாறாத நம்பிக்கையை, பக்தியை நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். இந்த முன்று விஷயங்களில்தான் ஒருவரது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. பூர்வ புண்ணியம் இல்லாது எவரும் ஷீரடியில் தங்கமுடியாது. தங்குவதற்கு எவ்வளவு நிச்சயம் செய்து கொண்டு வந்தாலும் சரி, எல்லா சாமர்த்தியங்களும் பாபாவின் முன் செல்லுபடியாகாது. ஒருவர் தாராளமாக நினைக்கலாம். நான் ஷீர்டிக்குப் போய் என் விருப்பம்போல் தங்கப் போகிறேன் என்று. ஆனால், அது அவருடைய கைகளில் இல்லை, ஏனெனில் அவர் முழுக்கவும் பாபா சக்திக்கே உட்பட்டுள்ளார். கோபம், பேராசை, காமம், தவறான எண்ணம், அகங்காரம், பொறாமை என்கிற இந்த ஆறு எதிரிகளிடமும் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பேரானந்தத்தை நீங்கள் அடைய இந்த ஆறு எதிரிகளிடமும் போராடுங்கள். நிச்சயமாக நான் அதற்க்கு உங்களுக்கு உதவுகிறேன். என்னை நம்புங்கள். இறைவன் எப்போதும் நம்மையே நினைத்துக் கொண்டிருப்பவன். ஆனால், நாமோ அவனைத் தவிர பிறவற்றில் மனதை செலுத்திக் கொண்டு இருப்பவர்கள். இதனால் அவன் மீது நமக்கு அன்பும் வருவதில்லை. ஐக்கியமும் ஏற்படுவதில்லை. நான் அப்படித்தான் பக்தி செலுத்துகிறேன், ஆனால் கஷ்டம் தொடருகிறதே என்று நீங்கள் கேட்பீர்களானால், உங்கள் பக்தி பொய்யானது என்று பொருள். ஐக்கிய உணர்வு வந்துவிட்டால் துன்பமும் இன்பமும் தனித்தனியாக தெரியாது, அனைத்தும் சமமாகத் தெரியும். மனம் இறைவனிடம் கெஞ்சிக் கேட்காது. அதைப் பற்றி நினைக்காமல் நடைபோட ஆரம்பிக்கும்.

பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது. கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதைபோன்றே பாபாவின் பீடமும்! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. பாபாவைத் தவிர, தனக்கு வேறு கதி எதுவுமில்லை என்பதை உணர்ந்து, திடமான நம்பிக்கையும், விசுவாசத்தையும் பெற்றுவிடுகிறான். நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே. எங்கெல்லாம் என்னை நினைக்கிறயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்