SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாஸ்தாவிற்கு மஞ்சள் ஆடையும், சர்க்கரைப் பொங்கலும் ஏன்?

2019-04-23@ 10:41:07

ஒருசமயம், ஆனைமுகப்பெருமான், தன் இளைய சகோதரனான பாலசாஸ்தாவை தன் மூஷிக வாகனத்தில் அமர்த்திக்கொண்டு அகில உலகமெங்கும்  வலம் வந்துகொண்டிருந்தார். அதனை அறிந்த சரஸ்வதி தேவி அவர்களை தங்கள் லோகமான சத்யலோகத்துக்கு அழைத்தாள். ஆனை முகனும்  சாஸ்தாவும் அதனை அறிந்து சத்யலோகத்தை நோக்கி வரலானார்கள். இதனால் பெருமகிழ்ச்சி கொண்ட கலைமகள், தன் நாயகரை நோக்கி, ‘‘சிவகுமாரர்களான சாஸ்தாவும், விநாயகரும் நமது லோகத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வரவேற்பளித்து நல்ல முறையில் உபசரிக்க வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டாள். ரிஷிகளும், யோகிகளும், சத்ய லோகத்தில் வாழும் ஜீவன் முக்தர்களும் புடைசூழ, பிரம்மதேவன் விநாயகனையும், சாஸ்தாவையும் பூர்ண கும்பத்தோடு வரவேற்றார்கள்.

வேத கோஷங்கள் முழங்க அவ்விரு பாலகர்களும் சத்ய லோகத்தை அடைந்தார்கள். தாங்கள் பெற்ற இருவரையும் வரவேற்று 64 வகை  உபசாரங்களையும் செய்து மகிழ்ந்தார்கள். அவர்களை நறுமணமிக்க நீரால் மங்கள நீராட்டினர். அதன்பின்னர் விநாயகருக்கு வெண்ணிற  பட்டாடைகளையும் மகா சாஸ்தாவுக்கு மஞ்சள் நிறப்பட்டாடைகளையும் அளித்தார்கள். அழகிய ஆசனங்களில் அமர்த்தி, அறுசுவையோடு உணவளித்து  மகிழ்ந்தார்கள். ஏகதந்தனுக்கு அவனுக்குப் பிரியமான மோதகத்தையும், மகா சாஸ்தாவுக்கு சர்க்கரைப்பொங்கலையும் இட்டு மகிழ்ந்தாள் சரஸ்வதி. விநாயகரும் மோதகத்தை விரும்பி உண்டார். சாஸ்தாவும் ‘‘வாக்தேவியே! என்மீது கொண்ட அன்பினால் நீங்கள் எனக்களித்த மஞ்சள் பட்டாடையும், சர்க்கரைப் பொங்கலும் எனக்கு மிகவும் மனநிறைவை அளிக்கிறது. உங்கள் அன்பின் வெளிப்பாடாக நீங்கள் அளித்த இந்த மஞ்சள் பட்டும் சர்க்கரைப்பொங்கலும்  இனி எனக்கு என்றும் பிரியமானவையாக இருக்கும். இவற்றை எனக்கு அளிப்பவர் எனது அருளை எளிதில் பெறுவர்’’ என்று வரமருளினார்.

- இ.எஸ்.சுகந்தன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்