SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை பெரியகோயிலில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

2019-04-16@ 15:14:13

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை பெரிய கோயிலில் இந்தாண்டுக்கான சித்திரைப்பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமிகள் புறப்பாடு நடைபெற்று வருகிறது. பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று காலை தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5.15 மணிக்கு மேல் பெரியகோயிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர் கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு  மேலவீதியில்  உள்ள தேர்முட்டியை வந்தடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு  பூஜைகள் செய்தனர்.

அதைத்தொடர்ந்து தியாகராஜர்கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர். காலை 6 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் அசைந்தாடி வந்தது. தேரோட்டத்தை கலெக்டர் அண்ணாதுரை  வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அப்போது பக்தர்கள், ‘’தியாகேசா ஆரூரா, தென்நாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவருக்கும்  இறைவா போற்றி’’என்ற கோஷங்கள் எழுப்பி தேரை வடம்  பிடித்து இழுத்தனர். தேர் மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி,  தெற்குவீதி என நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம்  வழங்கப்பட்டது. வரும் 19ம் தேதி மாலை  கொடியிறக்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்