SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லிங்கனூர் பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

2019-04-16@ 14:51:46

தொண்டாமுத்தூர்: கோவை அருகே லிங்கனூர் பழைய மருதமலை ரோடு பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிசேக விழா விநாயகர் வேள்வியுடன் தொடங்கியது. இதையடுத்து  புனித நீர் வழிபாடு ஆனைமுகன், எட்டு விதமான திருமகள், நவகோள் வேள்வி நடந்தது. பூமா தேவி வழிபாடு, புனித மண் எடுத்தல் புனித நீர் எடுத்து புதிய மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கோபுரத்தில் கலசங்கள் நிறுவுதல், முளைப்பாரி பூஜை கங்கணம் அணிவித்தல் திருக்குடங்கள் அலங்கரித்தல் நடந்தது.

வேள்வி சாலையில் இருந்து கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி வந்து, கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என்று கோஷமிட்டனர் தொடர்ந்து பட்டத்தரசி அம்மனுக்கு மகாஅபிஷேகம், மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார் விழாவில் அருண்குமார் எம்எல்ஏ, எம்ஜிஆர் இளைஞர் அணி புறநகர் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்