SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈசாந்திமங்கலம் முறிபாலத்தடி மாடன் கோயில் கொடை விழா

2019-04-16@ 14:49:00

நாகர்கோவில்: ஈசாந்திமங்கலம் அருள்மிகு முறிபாலத்தடி மாடன் கோயில் கொடைவிழா நேற்று தொடங்கியது. விழா 3 நாட்கள் நடக்கிறது. விழாவில் முதல் நாள் நேற்று (15ம் தேதி) காலை கணபதி ஹோமம், மாலை வில்லிசை, இரவு குடியழைப்பு தீபாராதனை, நையாண்டி மேளம், மகுட மேளம் நடந்தது. 2ம் நாள் இன்று செவ்வாய் கிழமை காலை 7 மற்றும் 8 மணிக்கு நையாண்டி மேளம், 9 மணிக்கு வில்லிசை, பகல் 11 மணிக்கு களபம் சாத்துதல், பொங்கல் வழிபாடு, 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு மகுட மேளம், 9 மணிக்கு போட்டி மேளம், போட்டி கரகாட்டம், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 1 மணிக்கு ஊட்டுபடைத்தல், தீபாராதனை, 1.30க்கு ஊட்டு பிரசாதம் வழங்குதல், 2 மணிக்கு கரகாட்டத்துடன் போட்டி மேளம் நடைபெறுகிறது.

விழா நிறைவு நாள் நாளை (17ம் தேதி) காலை 7 மணிக்கு மகுட மேளம், 9 மணிக்கு நையாண்டி மேளம், பகல் 11 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு தீபாராதனை, 12.30க்கு அலங்கார பூ எடுத்தல் நடைபெறுகிறது. எட்டாம் கொடை விழா ஏப். 23ம் தேதி செவ்வாய் கிழமை நடக்கிறது. இதையொட்டி பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்