SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர் கோயிலில் சித்திரை திருவிழா

2019-04-16@ 14:48:17

தரங்கம்பாடி: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் திருகல்யாண நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். இக்கோயில் தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருகல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

திருமணத்தையொட்டி அபிராமி அம்பாளும், அமிர்தகடேஸ்வரரும் பட்டாடை உடுத்தி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருமணத்தையொட்டி பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருமண வைபோகத்தை நடத்தி வைத்தனர். அதன்பின் ஊஞ்சலில் அபிராமி அம்மாளும், அமிர்தகடேஸ்வரரும் வைக்கப்பட்டன. மந்திரங்கள் ஓத தீபாவைருதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. சித்திரை விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதினமும், கோயில் அலுவலர்களும் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்