SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் தெப்ப தேரோட்டம்

2019-04-16@ 14:44:12

கோவில்பட்டி:  கோவில்பட்டி  செண்பகவல்லி அம்பாள் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் தெப்பத் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 13ம் தேதி தேரோட்டமும், நேற்று முன்தினம் (14ம் தேதி) தீர்த்தவாரியும் நடந்தது. இந்நிலையில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை  சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் நிறைவுவிழா, தெப்ப தேரோட்டம் நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று காலை சுவாமி,  அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 10.40 மணிக்கு யாகசாலை பூஜை,  அபிஷேகம்  நடந்தது.  மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க அம்பாள் வீதியுலாவாக அடைக்கலம்காத்தான் மண்டபத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து தெப்பத் தேருக்கு எழுந்தருளினார். இரவு 8.15 மணியளவில் தெப்பத்தில் மலர்களால்  அலங்கரிக்கப்பட்ட தேரில் 9 முறை உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை திரளானோர் தரிசித்தனர்.இதையொட்டி நாடார் உறவின்முறை  சங்கம் சார்பில் அடைக்கலகாத்தான் மண்டபம் அருகே இன்னிசை கச்சேரியும்,  நாடார் காமராஜ் மெட்ரிக்ன் பள்ளியில் அன்னதானமும் நடந்தது.

 விழாவில் கோவில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், தலைமை எழுத்தர் ராமலிங்கம்,  நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம், சங்க துணைத் தலைவர் செல்வராஜ்,  செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், பொதுநல மருத்துவமனை  தலைவர் திலகரத்தினம், பத்திரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா சின்னமாடசாமி,  தெப்ப தேர்த்திருவிழா கமிட்டியை சேர்ந்த ஆர்.எஸ்.முருகன், ஜோதிபாசு,  பாலமுருகன், சீனிவாசன், சோலையப்பன், மாணிக்கம், சத்தியமூர்த்தி,  சண்முகசுந்தரம், சந்திரசேகர், வைத்தியலிங்கம், தெய்வேந்திர பூபதி உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானோர்  பங்கேற்றனர். கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ்  தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்