SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்

2019-04-16@ 14:42:03

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்வாக 5ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் ஆகிய இருவருக்கும் திருக்கல்யாண வைபோகம் நடந்தது.விழாவினை முன்னிட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த பெண் பக்தர்கள் அனைவருக்கும் தாலி கயிறு, மஞ்சள்,குங்குமம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்