SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காப்புக் கயிறு கட்டுங்க! கெட்டிமேளம் நிச்சயங்க!

2019-04-16@ 09:44:07

காப்புக்கயிறு கட்டுதல் : 16.04.2019

புதுச்சேரி அருகேயுள்ள நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோயில் வரப்பிரசாதியான பழமையான கோயிலாகும். வருடா வருடம் ஆண்டாள் கல்யாணமும், சீதா கல்யாணமும் வைபோகமாக நிகழ்த்தப்படுகிறது. இந்த வருடமும் 14.4.2019 அன்று விமரிசையாக ஸ்ரீசீதா திருக்கல்யாண உற்சவம் நடக்கவுள்ளது. மாலை 6 மணியிலிருந்து ஸ்ரீராமரும், சீதையும் திருமணக் கோலத்தில் சந்நதி புறப்பாடும் அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம், அர்ச்சனை, தாம்பூலப் பிரசாதம் என நிகழ உள்ளன. இந்நிகழ்ச்சிகளின் பிரதான அம்சமே ராமர் சீதை காப்புக்கயிறு கட்டிக் கொள்வதுதான்.

அதாவது, திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண், பெண் இருபாலாரும், இக்கோயிலில் சீதா திருக்கல்யாணத்தை ஒட்டி 16.4.2019, செவ்வாய் கிழமை அன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் முடியும். அன்று காலை 8 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் காப்புக்கயிறு கட்டுவார்கள். புதுச்சேரி கடலூர் வழியில் தவள குப்பத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி  விழுப்புரம் வழியில் அரியூரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.
 
வெங்கடசாமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்