SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்புத்தூர் அருகே புரவி எடுப்பு விழா

2019-04-15@ 17:52:44

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கே.வைரவன்பட்டியில் புரவி எடுப்பு விழா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்திநம் நடைபெற்றது. திருப்புத்தூர் அருகே கே.வைரவன்பட்டியில் உள்ள மகிழம்பூ அய்யனார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு நடைபெறுவது வழக்கம். இவ்விழா கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்.5ல் புரவி எடுப்பு விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கிராம மக்கள் சாமியாட்டம், முளைப்பாரி எடுத்தல் என அய்யனாரை வழிபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று புரவிகள் புரவிப் பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு புரவிப் பொட்டலிலருந்து புரவிகள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக அய்யனார் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இவ்விழா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால் கே.வைரவன்பட்டி கிராமத்தினர் மற்றும் சுற்று வட்டார கிராமத்தினரை விருந்துக்கு அழைத்து உற்சாகப்படுத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்