SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோஷங்கள் நீங்கி புண்ணியம் அருளும் சங்கமேஸ்வரர் கோயில்

2019-04-15@ 09:45:35

பவானி. ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலமாகவும், கோயில் நகரமாகவும், தென் மாநில அளவில் புகழ்பெற்ற பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு, காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் காசியில் மூழ்கி எழுந்தால் பாவங்களைத் தொலைக்கலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதேபோன்று, தென் மாநில அளவில் புகழ்பெற்ற காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் கூடும் பவானி கூடுதுறை. தட்சிணப்பிரயாகை என அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் குளித்தெழுந்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும் காலங்காலமாக இந்துக்கள் நம்பி வருகின்றனர். காவிரிக் கரையோரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கமேஸ்வரர் கோயிலும் உள்ளது கூடுதல் சிறப்பு. திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரி நாதரால் பாடல் பெற்றதோடு, புராண வரலாற்றை உடைய இக்கோயில் சைவ, வைணவ சமரசத்தை உலகுக்கு உணர்த்தி வருகிறது.

இங்கு, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோயில், ஸ்ரீசீதேவி, ஸ்ரீபூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. அம்மன் சன்னதிக்கும், ஈஸ்வரன் சன்னதிக்கும் இடையே முருகன் சன்னதி உள்ளது. வடக்கு திசை நோக்கும் ராஜகோபுரம் அழகிய வேலைப்பாடுகள் உடையது. கோபுரத்தையொட்டி வைகுண்ட வாசலும் உள்ளது. இக்கோயிலில் உள்ள கல் சிற்பங்கள் புராணக் கதைகள், தேவாரக் கதைகளை விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தல விருட்சம் இலந்தை மரம். இறைவனை வேண்டி இக்கனியை உண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. புகழ் சேர்க்கும் பவானி ஜமக்காளங்கள் கைத்தறித் தொழிலுக்குப் புகழ்பெற்ற பவானியில் தயாரிக்கப்படும் ஜமக்காளங்கள் உலகப் பெயர் பெற்றவை. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்! தனிதன்மை! புவிசார்ந்த குறியீடுகளால் தொழில், கலை, பாரம்பரியம் என அந்த ஊரும், சுற்றியுள்ள பகுதிகளும் உலகப் புகழ்பெறுகின்றன.

இக்கோயிலில் உள்ள கல் சிற்பங்கள் புராணக் கதைகள், தேவாரக் கதைகளை விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தல விருட்சம் இலந்தை மரம். இறைவனை வேண்டி இக்கனியை உண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. புராதன நகராகவும், சுற்றுலா தலமாகவும் பவானி நகர் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆண்டுதோறும் தமிழகம் மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகளின் வருகை இருந்த வண்ணமே இருக்கும். பவானி நகர், மாவட்டத் தலைநகரான ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் உள்ளது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து ரயிலில் வருவோர் ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். கோவையிலிருந்து வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 55 கி.மீ. தொலைவு தெற்கேயும் வர வேண்டும். கைத்தறித் தொழிலுக்குப் புகழ்பெற்ற பவானியில் தயாரிக்கப்படும் ஜமக்காளங்கள் உலகப் பெயர் பெற்றவை.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர்! தனிதன்மை! புவிசார்ந்த குறியீடுகளால் தொழில், கலை, பாரம்பரியம் என அந்த ஊரும், சுற்றியுள்ள பகுதிகளும் உலகப் புகழ்பெறுகின்றன. திருப்பதிக்கு லட்டு, ஊத்துக்குளி வெண்ணெய், மதுரை சுங்கடி சேலைகள் என பூகோள ரீதியான புகழ், பவானிக்கு ஜமக்காள உற்பத்தியின் மூலம் கிடைத்துள்ளது. குழிக்குள் இறங்கி கடுமையான உழைப்பை வெளிப்படுத்தும் மக்கள் நிறைந்துள்ளதும், சாயமிட்டால் சட்டெனப் பிடித்து நிற்கும் பவானி ஆற்றின் நீருமே பவானிக்கு இப்புகழை அளித்துள்ளன. பவானியில் உற்பத்தி செய்யப்பட்ட ஜமக்காளத்தை ஒருகாலத்தில் தலைச்சுமையாக ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்து வந்தனர். ஜமக்காளம் பல வண்ணங்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதன் சிறப்பே, தறியில் போடப்பட்டிருக்கும் பாவு நூலின் கலர் ஜமக்காளத்தில் தெரியாது. ஊடையின் வண்ண நூல் மட்டுமே தெரியும் வகையில் நுட்பமாகவும் மொத்தமாகவும் நெசவு செய்யப்படுகிறது. ஜமக்காளத்துக்கு பாவுக்கும், ஊடைக்கும் 10 நெம்பர் நூலே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு, ஒன்றரை அடி மட்டுமே அகலம் கொண்ட பந்தி ஜமக்காளம் முதல், 3 பேர் நெய்யும் ஹால் கார்பெட் எனப்படும் பிரமாண்ட ஜமக்காளம் வரை இங்கு தயாராகி வருகிறது. வீட்டில் நடக்கும் திருமண பேச்சுவார்த்தை முதல் தொடர்ந்து நடைபெறும் நிச்சயதார்த்தம், திருமணம், பரிசுப் பொருள்கள் என தமிழர்களின் கலாச்சாரத்துடன் பவானி ஜமக்காளம் பிரிக்கமுடியாமல் கலந்து விட்டது. தற்போது, ஜமக்காளத்தில் பட்டு நூல்களைக் கொண்டு நெசவு செய்யப்பட்டு, கண்ணைக் கவரும் வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுகள் போனாலும், காலங்கள் கழிந்தாலும் ஜமக்காளத்துக்கென தனிப்பெயர் நீடிப்பது அதன் தரத்துக்கும், வண்ணம் மாறாமல் நீண்ட காலம் தாங்கும் தன்மைக்குமே. இத்தரைவிரிப்புகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பெருமளவில் அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அடிப்படை மரபுகள் மீறப்படாமல் இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறும் இடங்களில் பவானி தரை விரிப்புகள் பெரிதும் விரும்பப்படுவதோடு, மரபின் சின்னங்களாகவும் கருதப்படுகின்றன. பவானி நகர், மாவட்டத் தலைநகரான ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் உள்ளது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து ரயிலில் வருவோர் ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். கோவையிலிருந்து வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 55 கி.மீ. தொலைவு தெற்கேயும் வர வேண்டும். கோயில் திறக்கப்படும் நேரம் : காலை 6 முதல் பகல் 1 வரை. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. நாள்தோறும் 6 காலை பூஜை இக்கோயிலில் நடைபெறும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்