SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-04-12@ 17:11:31

ஏப்ரல் 13, சனி  

ஸ்ரீராம நவமி. திருவள்ளுவர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருடவாகனத்தில் புறப்பாடு. வடுவூர் கோதண்டராமர் துவஜாரோகணம். வசந்த நவராத்திரி பூர்த்தி, பருத்தியூர் ஸ்ரீராமநவமி உற்சவம் ஆரம்பம்.திருப்போரூர் செம்பாக்கம் ஸ்ரீமத் ஔஷத லலிதா மஹா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தானம். 8ம் ஆண்டு ஸ்ரீலலிதா மகா நவராத்திரி பெருவிழா. மாலை பண்டாசூரசம்ஹாரம்.

ஏப்ரல் 14, ஞாயிறு  

சீர்காழி ஸ்ரீஉமாமகேஸ்வரருக்கு உச்சி காலத்தில் புழுகாப்பு. விழுப்புரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் லட்ச தீபம். திருவையாறு ஆத்ம பூஜை. ஆரூர் ஸ்வாமிகள் பூஜை. திருப்போரூர் செம்பாக்கம் ஸ்ரீமத் ஔஷத லலிதா மஹா திரிபுரசுந்தரிக்கு மகா அபிஷேகம், புஷ்பாஞ்சலி.

ஏப்ரல் 15, திங்கள்  

ஏகாதசி. திருக்கடவூர் காலசம்ஹாரம், தூத்துக்குடி ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு உருகு சட்ட சேவை. மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்.

ஏப்ரல் 16, செவ்வாய்

வாமனத் துவாதசி. திருவையாறு கோரதக் காட்சி, திருப்பனந்தாள் திருக்கல்யாணம். திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி உதய கருட சேவை. திருக்கழுக்குன்றம் திருத்தேர். கோயம்புத்தூர் ஸ்ரீதண்டு மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் ரதோற்சவம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திக் விஜயம். திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி வெள்ளி மஞ்சத்தில் தபசுக் காட்சி.

ஏப்ரல் 17, புதன்  

மஹா பிரதோஷம். திருவையாறு திருச்சி மகாரதம், காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் ராஜவீதி உற்சவம், காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கல்யாணம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். மஹாவீரவர்த்தமான பகவான் ஜெயந்தி.

ஏப்ரல் 18, வியாழன்   

காஞ்சி ஸ்ரீதேவராஜ ஸ்வாமி திருஅவதார தினம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம். திருச்சிராமலை, சங்கரநயினார் கோயில், கடையம், சீர்காழி, திருப்பனந்தாள், திருக்கடவூர், தூத்துக்குடி ஆகிய திருத்தலங்களில் ரதோற்சவம். ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் ரதோற்சவம்.

ஏப்ரல் 19, வெள்ளி  


சித்ரா பெளர்ணமி. பெளர்ணமி விரதம். மடிப்பாக்கம் குபேரநகர் சீதளாதேவி கோயிலில் பாற்குட உற்சவம், பெளர்ணமி விரத பூஜையில் மருக்கொழுந்து சாத்துதல், சித்ரகுப்த பூஜை, திருவையாறு பிட்சாடனார் உற்சவம், இரவு குதிரை வாகனம், காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி நடப்பாவி உற்சவம். மதுரை வைகையாற்றில் ஸ்ரீகள்ளழகர் எழுந்தருளல். திருமுல்லைவாயல் பச்சையம்மன் மகா அபிஷேகம். திரு உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி. உத்தமர்கோயில் புருஷோத்தமப் பெருமாள் தேரோட்டம். தேவேந்திர பூஜை. கூவாகம் கூத்தாண்டவர்கோயில் திருவிழா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BhuldanaAccidentMum

  மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்