SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீராத வினைகளை தீர்த்து வைக்கும் திருத்தங்கல் மாரியம்மன்

2019-04-12@ 09:42:37

பொதுவாக பங்குனி, சித்திரை மாதங்களில் சூரிய பகவான் தன் உஷ்ண பார்வையை அதிகமாக செலுத்துவார்... மாரியம்மன் மழைக்கு உகந்த கடவுள் அல்லவா?... மாரி என்றால் மழை தானே? சூரியனின் வெப்பத்தில் இருந்தும், அதனால் வரும் நோய் நொடிகளில் இருந்தும் தங்களை காக்கவும், மழை தர வேண்டியும் மக்கள் மாரியம்மனுக்கு இந்த மாதங்களில் கொண்டாடும் விழாக்கள்தான் பங்குனி மற்றும் சித்திரை பொங்கல் விழாக்கள். இந்த திருவிழாக்கள் சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பங்குனி, சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) எட்டு சமூகத்தார் உறவின்முறை பொதுமகமைப் பண்டுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் 71ம் ஆண்டு பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள்பெறுவர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் விஷேச அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது. அம்மன பல்வேறு வாகனங்கள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல்.

கயறுகுத்து திருவிழா இன்று நடைபெறுகிறது. பக்தர்கள் பொங்கல் வைத்தும் பூச்சட்டி எடுத்தும், கயிறு குத்துதல், ஆயிரங்கன்பானை, உருவம் மற்றும் பிற நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவர். நாளை செவ்வாய்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெறுகிறது. காலையில் பால்குடம் எடுத்து அம்மன் வழிபாடு நடைபெறுகிறது. மாலையில் மேள, தாளம் முழங்க முளைப்பாரி திருவீதி உலா உற்சவம், மாவிளக்கு எடுத்தல் நடைபெறுகிறது. வரும் 12ம் தேதி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

பொங்கல் திருவிழாவில் அம்மனுக்கு அக்னி சட்டியும், ஆயிரங்கண் பாணையும் எடுத்து, அருளோடு வலம் வந்து வாயார வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பாகும். உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்தல் நல்லது. குறை நிவர்த்தி வேண்டி திருகோயிலில் தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், மக்கள் பேறு அளித்தும், மாங்கல்ய பாக்கியம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனைத் தரிசித்து அருள்பெறுவோமாக! பொங்கல் திருவிழா ஏற்பாடுகளை திருத்தங்கல் எட்டு சமூகத்தார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

 • roborestaurantbang

  பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்