SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

2019-04-11@ 15:39:32

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நாடார் உறவின்முறை சார்பில் கடந்த 3 நாட்களாக மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் அம்மனுக்கு ஆக்கி படைத்தல் நிகழ்ச்சியும்,  இரண்டாம் நாள் காலை கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு  செய்தனர். கடைசி நாளான நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை கோயில் முன் பூ வளர்த்தனர்.

கோயில் முன்பு பெண்கள் அக்னிச்சட்டி மற்றும் மஞ்சள் நீர் எடுத்து நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். அங்கு அக்னிச்சட்டி மற்றும் மஞ்சள்நீர் இறக்கி வைத்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். அதன்பின்னர் மஞ்சள்நீர் விளையாட்டு நடைபெற்றது. மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உறவின் முறை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்