மீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா
2019-04-11@ 15:37:42

மதுரை: சித்திரை திருவிழாவில் 3ம் நாளான நேற்று, இரவில் மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கைலாச பர்வதம் வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனி வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். திருவிழாவின் 3ம் நாளான நேற்று காலை மாசி வீதிகளில் தங்கச் சப்பரத்தில் உலா வந்து, கோயிலுக்குள் கல்யாண சுந்தர முதலியார் மண்டகபடியில் எழுந்தருளினர்.
இரவில், சுவாமி பிரியாவிடையுடன் கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் உலா வந்தனர். இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து காலை 9 மணிக்கு சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரத்திற்கு சுவாமி, அம்மன் தங்கப்பல்லக்கில் உலா செல்கின்றனர். தொடர்ந்து வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகின்றனர். மாலை 6 மணிக்கு தெற்குவாசல், சின்னக்கடைத் தெரு வழியாக வந்து சித்திரை வீதிகள் சுற்றி கோயிலுக்கு அம்மன் சுவாமி தங்கப்பல்லக்கில் வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா
வத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது
சேத்தூரில் பூக்குழி திருவிழா
திருமானூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது