SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

2019-04-11@ 15:35:59

நத்தம்: நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடந்தது. நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில்  பங்குனி திருவிழா மார்ச் 31ம் தேதி துவங்கியது. இதையொட்டி அன்று காலை  சந்தனகருப்பு சுவாமி கோயிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வரப்பட்டது.  அன்றிரவு பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 5ம் தேதி  தோரண மரம் ஊன்றுதல், 7ம் தேதி அம்மன் குளத்தில் கரகம் பாலித்து அம்மன்  அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அரண்மனை மாவிளக்கு எடுத்தல்,  வாணவேடிக்கை நடந்தது.

8ம் தேதி காலையில் குளத்திலிருந்து பக்தர்கள்  பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்தனர். அன்று பிற்பகல் பக்தர்களுக்க  அன்னதானமும், இரவு ஊர் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று  முன்தினம் அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் சந்தனகுடம், அரண்மனை பொங்கல்,  ஊர் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுகள் நிகழ்ச்சி நடந்தன. தொடர்ந்து  அன்றிரவு கரகம் அம்மன் குளம் சென்றடைந்தது. நேற்று மஞ்சள் நீராடுதலுடன்  விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர், மீனாட்சிபுரம்  மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

  • YamagataEarthQuake18

    வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

  • RaptorsShootingToronto

    கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்