SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வ சக்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் ஸ்ரீ சாயிநாதர்

2019-04-11@ 09:49:13

பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணர வேண்டும். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும். எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன் என்றும், என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன் என்றும் பாபா கூறுகின்றார். அதை போன்றே பாபாவின் பீடமும். பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை.

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதை விட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, நல்ல குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமுள்ள இறைவனை அறிந்து கொள்வது தானாகவே பின் தொடர்கிறது. நிர்குணமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சீரடியில் இருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பி விடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார்.

பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின் மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும் போதும் உணவருந்தும் போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்! என் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கிறேன். அவனை விழ விடவே மாட்டேன். மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும் சாயி நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு அறிவோம். எவர், அவர் தம் அவரில் சரணாகதி அடைகிறார்களோ அவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்