SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-04-05@ 16:45:45

ஏப்ரல் 6, சனி   

சந்திர தரிசனம். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி காலை காளிங்க நர்த்தனம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரோட்டம். வசந்த நவராத்திரி ஆரம்பம், சம்வத்ஸர கௌரீ விரதம். திருக்கடவூர் அசுபதி தீர்த்தம்.

ஏப்ரல் 7, ஞாயிறு  

ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் தேரோட்டம். திருக்குற்றாலம் குற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் சந்தனகாப்பு விடையாற்றி.

ஏப்ரல் 8, திங்கள்  

கார்த்திகை விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் சித்திரைப் பெருவிழாத் தொடக்கம். துவஜாரோகணம். சுவாமி அம்பாள் கற்பக ரிஷப சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. சௌபாக்ய கெளரீ விரதம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் புஷ்பப் பல்லக்கு.

ஏப்ரல் 9, செவ்வாய்  

சதுர்த்தி விரதம். சக்தி கணபதி விரதம். ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் உற்சவாரம்பம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு. நேச நாயனார் குருபூஜை. திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் தேரோட்டம். பாலையூர் முத்து மாரியம்மன் தேர்த்திருவிழா, கீழநாஞ்சில்நாடு முத்தாட்சியம்மன் தீச்சட்டி திருவிழா.

ஏப்ரல் 10, புதன்  

அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் பூக்குழி விழா, மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி தேரோட்டம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருநாவலூரில் சூரிய பூஜை.

ஏப்ரல் 11, வியாழன்  

சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் திருவீதியுலா. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் ரிஷப வாகன சேவை. சீர்காழி திருமுலைப்பால் உற்சவம். திருவையாறு அந்தணர்புரம் ஸ்ரீநந்திகேஸ்வரர் ஜனனம்.

ஏப்ரல் 12, வெள்ளி  

சந்தான சப்தமி. மதுரை ஸ்ரீமீனாட்சி சொர்க்கநாதர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாணம். அசோகாஷ்டமி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்