SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரம் இட்லி

2019-04-05@ 14:39:27

பச்சரிசி - 4 படி.
உளுந்து - 2 படி.
வெந்தயம் - 4 டேபிள் ஸ்பூன்.
மிளகு - 5 டேபிள் ஸ்பூன்.
சீரகம் - 5 டேபிள் ஸ்பூன்.
(மிளகு - சீரகத்தைப் பொடிக்கவும்).
பெருங்காயம் - சிறிதளவு.
கறிவேப்பிலை - பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடி.
சுக்குத் தூள் - 20 கிராம்.
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - 1 கப்.

செய்முறை:

அரிசி, பருப்பு, வெந்தயம் - மூன்றையும் ஒன்றாக 3 மணிநேரம் ஊற வைத்து மணல் பதத்திற்கு அரைத்து அத்துடன் மிளகு, சீரகத்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, சுக்குத்தூள், உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து, கட்டி தட்டாமல் கலந்து வைக்கவும். ‘‘முதிர்ச்சி அடையாத பசுமையான மூங்கிலை மெல்லியதாக, குடலையாக சீவவேண்டும். அதில் மந்தாரை இலையை வைத்து, இட்லி மாவு கலவையை ஊற்றி பெரிய அளவு பித்தளைப் பாத்திரத்தில் இட்டு மேலே வாழை இலையை வைத்து வேக வைக்க வேண்டும். பச்சை நிற வாழை இலை வெந்து வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறும். வாழை இலையின் சாறும், மந்தாரை இலையின் வாசமும் கோயில் இட்லியில் இறங்கும். மண மணக்கும் காஞ்சிபுரம் இட்லி  பிரசாதம் தயார்.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்