SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்ணால் தூய்மை செய்தல்

2019-04-03@ 15:56:47

தொழுகைக்குத் தூய்மை அவசியம். அங்கத் தூய்மை எனப்படும் “உளூ” செய்யாமல் ஒருவர் தொழுகிறார் என்றால் அந்தத் தொழுகை நிறைவேறாது. அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீர் இன்றியமையாதது என்பதை நாம் அறிவோம். சரி, தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? தண்ணீர் அருகில் இருந்தாலும் அதைப் பயன்படுத்தினால் உடல்நலம் குன்றிவிடும் எனும் அச்சம் இருந்தால் என்ன செய்வது? அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுகையை நிறைவேற்றலாமா? கூடவே கூடாது. இதற்கு ஒரு மாற்று வழியைச் சொல்கிறது இஸ்லாமிய வாழ்வியல். தண்ணீர் கிடைக்காதபோது மண்ணைக் கொண்டு தூய்மை செய்துகொள்ளுங்கள் என்கிறது இறைமறைக் குர்ஆன். இதை ஒட்டி ஒரு சுவையான வரலாற்று நிகழ்வும் இருக்கிறது.

ஒரு போரிலிருந்து நபிகளார் திரும்பிக் கொண்டிருந்தார். அன்புத் துணைவியார் ஆயிஷா அவர்களும் உடன் இருந்தார். இரவின் பிற்பகுதியில் ஓரிடத்தில் படைவீரர்கள் தங்குவதற்காக முகாம் அமைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அன்னை ஆயிஷா  அவர்கள் அணிந்திருந்த கழுத்து மாலை எங்கோ தவறி விழுந்துவிட்டது. அந்த மாலையைத் தேடுவதற்காக மக்கள் எல்லாரும் இரவு அங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. படைவீரர்கள் தங்கியிருந்த அந்தப் பகுதியில் தண்ணீர் வசதி இருக்கவில்லை. தொழுகைக்கான நேரம் நெருங்கியது. அங்கத்தூய்மை செய்வதற்குத் தண்ணீர் இல்லாததால் மக்கள் பரிதவித்தனர். ஆயிஷாவின் தந்தையார் அபூபக்கர் தம் மகளை மிகவும் கடிந்து கொண்டார். “தண்ணீர் வசதி இல்லாத இடத்தில் கழுத்து மாலையைத் தொலைத்து விட்டாயே பார் இப்போது எவ்வளவு சிரமம்” என்றார்.

அந்த நேரத்தில்தான் தூய்மையான மண்ணைக் கொண்டு சுத்தம் செய்யும் சலுகையை நபிகளாருக்கு இறைவன் வழங்கினான். “.....தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள். அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும் கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த இறைவன் விரும்பவில்லை” (குர்ஆன் 5:6) எனும் திருவசனத்தை இறைவன் அருளினான். அரபு மொழியில் இது ‘தயம்மும்’
எனப்படுகிறது. இறைவன் அளித்த இந்தச் சலுகைக்கேற்ப மண்ணைக் கொண்டு தூய்மை செய்து நபிகளாரும் நபித்தோழர்களும் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்த நடைமுறை இன்றும் தொடர்கிறது. பயணத்தின் போதோ உடல்நலம் குன்றியிருக்கும் நேரங்களிலோ தண்ணீர் கிடைக்கவில்லை அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை எனில் மண்ணினால் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாம். இறைவன் அளித்துள்ள அரிய சலுகைகளில் இதுவும் ஒன்று.

இந்த வார சிந்தனை

“உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தன் அருட்பேற்றை நிறைவு செய்யவுமே இறைவன் விரும்புகிறான்.” (குர்ஆன் 5:6)

சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்