SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது

2019-04-01@ 17:29:19

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் பிரார்த்தனை தலமாகவும், பராசக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாதம் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. வரும் 7ம் தேதி தேர் திருவிழாவும், 12ம் தேதி தெப்பத் திருவிழாவும், 28ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அன்பரசன், பரம்பரை நிர்வாக அறங்காவலர் லெட்சுமிநாராயணன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்