SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உஸ்கூர் மத்தூரம்மன் கோயில் தேர்த்திருவிழா

2019-04-01@ 17:25:15

ஓசூர்: ஓசூர் அருகே, மத்தூரம்மன் கோயில் தேர்திருவிழாவில், மாடுகள் தேரை இழுத்து வந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் உஸ்கூரில், பழமை வாய்ந்த மத்தூரம்மன் கோயிலில், ஆண்டுதோறும் தேர்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில், தேரை பக்தர்கள் இழுக்காமல் மாடுகளே இழுத்து செல்லும் வழக்கம் உள்ளது. நேற்று கோயில் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி 12 தேர்கள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. பிறகு மத்தூரம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து 100 அடி உயரம் கொண்ட தேர்களை, மாடுகள் இழுத்து வர பக்தர்கள் பின்தொடர்ந்து வந்தனர். சுமார் 6 கி.மீ தூரத்திற்கு தேர்கள் இழுத்து வரப்பட்டன. பின்னர், மத்தூரம்மன் கோயில் அருகே மைதானத்தில், பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஓசூர், ஆனேக்கல், சர்ஜாபுரம், சந்தாபுரம், பொம்மசந்திரா, எலக்ட்ரானிக் சிட்டி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்