SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூய்மை

2019-03-27@ 16:35:13

“தூய்மை இறைநம்பிக்கையில் பாதி” என்பது நபிமொழி. ஐவேளைத் தொழுகைக்குத் தூய்மை முக்கியம் என்பதால் இஸ்லாமிய வாழ்வியல் தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. குறிப்பாக, சிறுநீர் கழிக்கும்போது ஆடையிலோ உடலிலோ பட்டு விடாமல் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று மார்க்கம் பெரிதும் வலியுறுத்துகிறது. அதே போல் சிறுநீர் கழித்த உடனே தண்ணீரால்  தூய்மை செய்துகொள்ள வேண்டும். சிறுநீர் தெறித்து உடலிலோ உடையிலோ பட்டுவிடு கின்ற இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது. நீர்நிலைகளின் அருகில், மக்கள் ஓய்வுக்காக ஒதுங்கும் மரநிழல் போன்ற இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது. இவ்வாறு சிறுநீர் கழிப்பதற்கும் உரிய சட்டதிட்டங்களையும் வழிகளையும் வகுத்துத் தந்துள்ளது இஸ்லாமிய நெறி.

சிறுநீர் கழிக்கும்போது  யாரும் பார்க்காத மறைவான இடத்தில்தான் கழிக்க வேண்டும். பிறர் பார்க்கும் வகையில் சிறுநீர் கழிப்பவர்களை நபிகளார் கண்டித்துள்ளார். உட்கார்ந்தபடிதான் சிறுநீர் கழிக்க வேண்டும். தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் நின்றுகொண்டும் சிறுநீர் கழிக்கலாம் என்றாலும் உடலில், உடையில் தெறிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் படிப்பினை மிக்க நிகழ்வு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் இரண்டு மண்ணறை களைக் கடந்துசென்றார். அப்போது நபிகளார் கூறினார்: “இந்த மண்ணறையில் உள்ளவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். அவர்கள் வேதனை செய்யப்படுவது பெரிய குற்றத்திற்காக அல்ல. ஒருவர், சிறுநீர் கழிக்கும் போது  தன் உடைமீது, உடல்மீது பட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்தார். (அவ்வாறு அலட்சியமாக இருந்து, தூய்மையைப் பேணாததற்காக) மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்.

“இன்னொருவர் கோள் சொல்லித் திரிபவர். கோள் சொல்லித் திரிந்ததனால் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்.” இவ்வாறு கூறிய நபிகளார், பேரீச்சமரத்தின் பசுமையான கிளை ஒன்றைக் கொண்டுவரும்படிக் கூறினார். அவ்வாறே கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அந்தப் பசுமையான கிளையை இரண்டாகப் பிளந்து இரண்டு மண்ணறைகள் மீதும் நட்டு வைத்தார்.“இந்தக் கிளைகள் காயாமல் இருக்கும்வரை வேதனை குறைக்கப்படும்” என்று கூறினார். ‘சிறுநீர்தானே... பட்டால் என்ன பாவம்’ என்று அலட்சியமாக இருக்காமல் மார்க்கம் சொல்கின்ற  வழிமுறைகளைக் கடைப்பிடித்துத் தூய்மையைப் பேணுவோம். தூய இறையின் அருளைப் பெறுவோம்.

இந்த வார சிந்தனை

“உங்களில் யாரும் குளியல் அறையில் சிறுநீர் கழித்து விட்டு அங்கேயே குளிக்க வேண்டாம்.”  நபிமொழி.

சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்