SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேத்தூரில் பூக்குழி திருவிழா

2019-03-26@ 15:24:41

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில், நேற்று முன்தினம் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ராஜபாளையம் அருகே, சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி அம்மனுக்கு பல வகையான அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து வீதிஉலா நடைபெற்றது. விழாவின் ஏழாம் நாள் பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் பக்தர்கள் ஆயிரம் கண்பானை முளைப்பாரி எடுத்து வந்தனர். விழாவை காண சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமாக குவிந்தனர். ராஜபாளையம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்