SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரட்டுமலை முருகன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

2019-03-22@ 14:34:31

துறையூர்: துறையூர் கரட்டுமலை பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. துறையூர் திருச்சி சாலையில் கரட்டுமலை பாலதண்டாயுதசுவாமி முருகன் கோயிலும், அதன் அருகில் பத்துமலை முருகன் கோயிலும் உள்ளது. நேற்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் உச்சிகால கட்டபூஜையாக திருநீறு அலங்காரம், சந்தன அலங்காரம் மற்றும் பால்,  தயிர்,  மஞ்சள் அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

துறையூர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் பாலக்கரை வழியாக காவடிகள் மற்றும் பால்குடங்களை சுமந்து கொண்டு திருச்சி சாலை வழியாக பஸ் நிலையம் வழியாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் துறையூர் திருச்சி சாலையில் உள்ள கோலோச்சும் முருகன் கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை செய்யப்பட்டது. அதைச் சுற்றியுள்ள 36 கிராமங்களிலும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்