கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?
2013-12-11@ 16:00:48

தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது. கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப ஆராதனையும் ஒன்று. கோவிலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும். தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால், ஒரு திரை போடப்படுகின்றது. தீபத்தை காட்டும் பொழுது திரை விலக்கப்படுகிறது. இதன் தத்துவம் என்னவென்றால், நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து, நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.
தெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது, முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும், இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும், மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும். பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.
நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும். ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.
மேலும் செய்திகள்
பரிகாரம் என்றால் என்ன?
கெட்டி மேளம் கொட்டும் நேரம் எப்போது?
நோய் நீக்கும் தலங்கள் எவை?
உங்களுக்கு சௌபாக்கிய யோகம் இருக்கிறதா?
திருமண பந்தத்தில் சேர ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் முக்கிய காரணமா?
புத்திர பாக்கியம் எப்படி? புத்திர தோஷம் உள்ளதா?
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு