SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உன்னை காக்கும் கவசமாய் விளங்குபவர் சாய்பாபா

2019-03-21@ 09:36:17

ஒருவர் உன்னை எந்த வகையில் அலட்சியப்படுத்தினாலும் அதை நீ உன் மனதிற்குள் எடுத்துக்கொள்ளாதே. புறக்கணிப்பு என்ற இடத்தில் தான் உனக்கான சரித்திரம் உருவாகிறது அந்த இடத்தில் தான் இருந்து விருட்சகமாய் வளர போகிறாய்! நான் மட்டுமே அனுசரித்து போக வேண்டுமா என்று நினைக்காதே நீ இப்படி நினைத்தால் உன் எதிரில் இருப்பவர் என்ன நினைக்க கூடும் இப்படியே போய் கொண்டு இருந்தால் இறுதியில் சண்டையிலும் வாக்குவாதங்களிலும் தான் முடியும் அமைதியாய் இருப்பது சிறந்தது பல பிரச்சினைகளில் இருந்து உன்னை காக்கும் கவசமாய் அது விளங்கும்.

உன் சாய்பாபாவின் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல் இனிமேல் என் நாவில் தோன்றும் சொற்களின் பேர் அருளை பெறுவாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன். உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் உன் தந்தை சாய்தேவா தூவாரகாமாயீ தாயுமாகிய நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன் உன்னில் எப்போதும் நான் இருப்பேன். நீ என்று என்னை சாய்அப்பா என்று அழைத்து உன்னிடத்தில் நான் என்னும் சொல்லுக்கு சாய்தேவா என்ற அர்த்தத்தை கண்டாயோ அன்றே நீ என் உயிரான பொறுப்பு.

உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். அதனால் எல்லாம் சரியாகிவிடும் எதற்கும் அஞ்சாதே உன்னோடும் உன் குடும்பத்தோடும் நான் என்ற உன் சாய்தேவா இருக்கிறேன். உன்னை நல்வழிபடுத்த வேண்டும் என்று பொறுப்பு உன் அனைத்துமாய் விளங்கும் உன் சாய்தேவா ஆன இந்த துவாரகாமாயீ தாய்க்கும் உள்ளது. என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

 • comic_consandiego111

  சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

 • 19-07-2019

  19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்