SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணத்தில் வேத மந்திரம்

2019-03-15@ 17:22:12

இஸ்லாமிய வாழ்வியலில் திருமணம் என்பது ஓர்  ஒப்பந்தம். பெண் பார்த்தல் தொடங்கி திருமணம் முடியும் வரை நிறைய ஒழுங்கு முறைகளை மார்க்கம் கற்றுத் தருகிறது. சிலருக்கு ஓர் ஐயம் இருக்கலாம். இதர மதத் திருமணங்களில் வேத மந்திரங்கள் ஓதுவது போல் இஸ்லாமிய திருமணங்களில் வேத வசனங்கள் ஓதப்படுகின்றனவா? ஆம். ஓதப்படுகின்றன. மணவிழாவின் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வேதத்திலிருந்து மூன்று திருவசனங்களை ஓதியுள்ளார். அந்த வசனங்களின் பொருள் அறிந்து மணமக்கள் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இனிமை நிறையும், இன்பம் வளரும். ஒவ்வொரு வசனத்திற்கும் பல பக்கங்களுக்கு விளக்கம் அளிக்க முடியும். ஆயினும் திருமணத்தின்போது ஓதப்படும் அந்த மூன்று வசனங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.
முதல் வசனம்:

“இறைநம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் இறைவனுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய் அன்றி மரணமடைய வேண்டாம்.”(குர்ஆன் 3:102)இரண்டாம் வசனம்: “மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும் அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த இறைவனின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம்  உரிமைகளைக் கோருகிறீர்களோ அந்த இறைவனுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் ரத்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகியிருங்கள். நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். இறைவன் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.” (குர்ஆன் 4:1)

மூன்றாம் வசனம்: “நம்பிக்கை கொண்டவர்களே, இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும் நேர்மையான சொல்லை மொழியுங்கள். இறைவன் உங்களுடைய செயல்களைச் சீர்திருத்தி விடுவான். உங்கள் குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். யார் இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றாரோ அவர் மகத்தான வெற்றி அடைந்து விட்டார்.” (குர்ஆன் 33:7071) இந்த மூன்று வேத வசனங்களையும் ஆராய்ந்து பார்த்தால் மணமக்கள் இருவரும் முதலில் இறைவனுக்கு அஞ்சி வாழ வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. வாழ்வின் அடித்தளமாக இறையச்சம்  இறைபக்தி இருக்குமேயானால் அந்த வாழ்வில் அநீதி இருக்காது.
அடுத்தடுத்த வசனங்களில் உறவுகளைப் பேணுதல், உரிமைகளை வழங்குதல், நேர்மையாகப் பேசுதல் போன்ற பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திருவசனங்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமைந்தால் இல்லறமே சொர்க்கம்தான்.

இந்த வார சிந்தனை

“திருமணம் என் வழிமுறை. யார் என் வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்.” நபிமொழி.

சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்