SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-03-15@ 17:02:06

மார்ச் 16, சனி  

மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம். இரவு பல்லக்கில் பவனி. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா. திருப்புல்லாணி ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள்கோயில் பட்டாபிராமர் உபய கருட சேவை. சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் பவனி. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் அறுபத்து மூவர். இரவு வெள்ளி ரதம், ஸ்ரீரங்கம் கருடசேவை. திருவையாறு திருமழபாடி ஸ்ரீதிருநந்திதேவர் திருக்கல்யாணம்.

மார்ச் 17, ஞாயிறு  

சர்வ ஏகாதசி. கழுகுமலை ஸ்ரீ முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், அம்பாள் வெள்ளிச் சப்பரத்திலும் பவனி. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் தேரோட்டம். காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருக்கோயில் தெப்போற்சவம்.

மார்ச் 18, திங்கள்  

மஹாபிரதோஷம். திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாளுக்கு தண்டியலில் திருக்கல்யாணம். இரவு யானை வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தலங்களில் ரத உற்சவம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர். சேலையூர் சக்தி அருட்கூடம் காஜபுஜண்டர் விழா.

மார்ச் 19, செவ்வாய்  

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் வெள்ளி மாவடி சேவை. நத்தம் ஸ்ரீமாரியம்மன் பாற்குடக் காட்சி. கழுகுமலை ஸ்ரீ முருகப்பெருமான் வெள்ளிக் குதிரையில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல். திருச்சுழி ஸ்ரீதிருமேனிநாதர் திருக்கல்யாணம்.

மார்ச் 20, புதன்  

பெளர்ணமி. பெளர்ணமி விரதம். ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கல்யாணம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பச்சைக் குதிரையில் பவனி. நாங்குநேரி, கழுகுமலை, திருச்சுழி, கங்கை கொண்டான் ஆகிய தலங்களில்   தேரோட்டம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம். திருத்தேர், உடையாளூர் செல்வ மாகாளியம்மன் உற்சவ ஆரம்பம். காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம். தங்க ரிஷபத்தில் பவனி. திருவண்ணாமலை கிரிவலம்.

மார்ச் 21, வியாழன்  

பங்குனி உத்திரம். மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகையாற்றுக்கு எழுந்தருளல். ஸ்ரீரங்கநாச்சியார் திருநட்சத்திரம். பரமக்குடி முத்தலாம்மன், திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் இத்தலங்களில்   தேரோட்டம். வேதாரண்யம் கங்கைக்கு பாபவிமோசனம். திருவாரூர் தியாகராஜர் வலப்பாத தரிசனம்.

மார்ச் 22, வெள்ளி.

நத்தம் ஸ்ரீ மாரியம்மன் சந்தனக்குடக் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் சூரசம்ஹாரம். ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரோட்டம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர்
திருக்கோயில் பஞ்சமூர்த்தி உற்சவம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்