SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குனி மாத விசேஷங்கள்?

2019-03-14@ 15:49:03

பங்குனி 1, மார்ச் 15, வெள்ளி  

நவமி. காரடையான் நோன்பு.  ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் சிங்க வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆண்டாள் திருக்கோலம், யானை வாகனத்தில் திருவீதியுலா. மயிலாடுதுறை வள்ளலார் கோயில் 7 தின சூரிய பூஜை ஆரம்பம். திருவையாறு திருநந்தி தேவர் ஜனன உற்சவம். இரவு பட்டாபிஷேகம், மயிலை ரிஷப வாகனம். வைத்தீஸ்வரர் கோயிலில் வேதபாராயணம். காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் தாயார் குளம் தெப்போற்சவம்.

பங்குனி 2, மார்ச் 16, சனி  


தசமி. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம், இரவு பல்லக்கில் பவனி. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா. திருப்புல்லாணி ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள்கோயில் பட்டாபிராமர் உபய கருட சேவை. சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் பவனி. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் காலை 63வர், இரவு வெள்ளி ரதம், ஸ்ரீரங்கம் கருடசேவை. திருவையாறு ஸ்ரீதிருநந்திதேவர் திருக்கல்யாணம்.

பங்குனி 3, மார்ச் 17, ஞாயிறு  

சுக்லபட்ச சர்வ ஏகாதசி. கழுகுமலை ஸ்ரீ முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், அம்பாள் வெள்ளிச் சப்பரத்திலும் பவனி. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோயில் தேரோட்டம். காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருக்கோயில் தெப்போற்சவம்.

பங்குனி 4, மார்ச் 18, திங்கள்  

துவாதசி. மஹாபிரதோஷம். திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் காலை தண்டியலில் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் தலங்களில் ரத உற்சவம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் 63வர். சேலையூர் சக்தி அருட்கூடம் காஜபுஜண்டர் விழா.

பங்குனி 5, மார்ச் 19, செவ்வாய்  

திரயோதசி. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்து அருளல், வெள்ளி மாவடி சேவை. நத்தம் ஸ்ரீமாரியம்மன் பாற்குடக் காட்சி. கழுகுமலை ஸ்ரீ முருகப்பெருமான் வெள்ளிக் குதிரையில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல். திருச்சுழி ஸ்ரீதிருமேனிநாதர் திருக்கல்யாணம்.

பங்குனி 6, மார்ச் 20, புதன்  

சதுர்த்தசி. பெளர்ணமி. கரிநாள். பெளர்ணமி விரதம். ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பச்சை குதிரையில் பவனி. நாங்குநேரி, கழுகுமலை, திருச்சுழி, கங்கை கொண்டான் ஆகிய தலங்களில்   தேரோட்டம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம், திருத்தேர், உடையாளூர் அம்மன் உற்சவ ஆரம்பம். காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் இரவு திருக்கல்யாணம் தங்க ரிஷபம். திருவண்ணாமலை கிரிவலம்.

பங்குனி 7, மார்ச் 21, வியாழன்  

பெளர்ணமி. பிரதமை. பங்குனி உத்திரம். மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல். ஸ்ரீரங்கநாச்சியார் திருநட்சத்திரம். பரமக்குடி முத்தாலம்மன், திருபுல்லாணி ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள் இத்தலங்களில்   தேரோட்டம். வேதாரண்யம் கங்கைக்கு பாபவிமோசனம். திருவாரூர் தியாக வலப்பாத தரிசனம்.

பங்குனி 8, மார்ச் 22, வெள்ளி  

துவிதியை. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் சந்தனக்குடக் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் சூரசம்ஹாரம். ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரோட்டம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சமூர்த்தி உற்சவம்.

பங்குனி 9, மார்ச் 23, சனி  

திரிதியை.  உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். காரைக்கால் அம்மையார் குரு பூஜை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புட்லூர் திருவூரல் உற்சவம்.

பங்குனி 10, மார்ச் 24, ஞாயிறு  

சங்கட ஹர சதுர்த்தி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு பெருமாள் தாயார் சந்திரப் பிரபையில் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பாற்குடக் காட்சி. வலங்கைமான் பாடை காவடி, ஸ்ரீசிவராமகிருஷ்ண அவதூதாள் ஆராதனை, சேலையூர் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஜெயந்தி. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம்.

பங்குனி 11, மார்ச் 25, திங்கள்  

பஞ்சமி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பெரியதேரில் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி உற்சவம் ஆரம்பம். கல்யாண அவசரத் திருக்கோலமாய்த் திருச்சிவிகையில் பவனி. நந்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் பாவாடை, பால்குடம், காவடி ஆட்டம்.

பங்குனி 12, மார்ச் 26, செவ்வாய்  

கிருஷ்ணபட்ச சஷ்டி. திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரி நாதர் கருட வாகனத்தில் திருவீதியுலா. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் விடாயாற்று உற்சவம். நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா. பட்டுக்கோட்டை ஸ்ரீநாடியம்மனுக்கு காப்பு கட்டுதல்.

பங்குனி 13, மார்ச் 27, புதன்  

சப்தமி.  சென்னை மல்லீஸ்வரர் விடாயாற்று உற்சவம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க சேவை. திருவேதிக்குடியில் சூரிய பூஜை.

பங்குனி 14, மார்ச் 28, வியாழன்  

அஷ்டமி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரி நாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு. தென்பரம்பைக்குடியில் சூரிய பூஜை.

பங்குனி 15, மார்ச் 29, வெள்ளி  

நவமி. கரிநாள். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு புன்னைமர வாகனத்தில் பவனி வரும் காட்சி. தாயமங்கலம்
ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவம்.

பங்குனி 16, மார்ச் 30, சனி  

தசமி. திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வாகனத்திலும் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, வெண்ணெய்த்தாழி சேவை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரஸ்வாமி சம்வத்ஸாரபிஷேகம்.

பங்குனி 17, மார்ச் 31, ஞாயிறு  

ஏகாதசி. திருவோண விரதம்.  திருவெள்ளறை ஸ்ரீவேதாத்திரிநாதர் தேரோட்டம். ஒழுகைமங்கலம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். சென்னை மல்லீஸ்வரர் விடாயாற்று.

பங்குனி 18, ஏப்ரல் 1, திங்கள்  

ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி.

பங்குனி 19, ஏப்ரல் 2, செவ்வாய்  

துவாதசி. பிரதோஷம். கரிநாள். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. நந்தியடிகள் நாயனார் குரு பூஜை. மேலஉளூர் பரிதியப்பர் கோயிலில் சூரிய பூஜை.

பங்குனி 20, ஏப்ரல் 3, புதன்  

திரயோதசி. மாத சிவராத்திரி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி தங்க சூரியப் பிரபையில் வேணுகோபால திருக்கோலமாய்க் காட்சி. உடையாளூர் உற்சவம்.

பங்குனி 21, ஏப்ரல் 4, வியாழன்  

சர்வ அமாவாசை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதிவுலா. ஏரல் ஸ்ரீஅருணாசல சுவாமிகள் திருவிழா.

பங்குனி 22, ஏப்ரல் 5, வெள்ளி  

அமாவாசை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை. திருநெல்வேலி ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை.

பங்குனி 23, ஏப்ரல் 6, சனி  

பிரதமை. சந்திர தரிசனம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காளிங்க நர்த்தனம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரோட்டம். வசந்த நவராத்திரி ஆரம்பம், ஸ்வேதவராஹ கல்பாதி. சம்வத்ஸர கௌரீவிரதம். திருக்கடவூர் அசுபதி தீர்த்தம்.

பங்குனி 24, ஏப்ரல் 7, ஞாயிறு   

துவிதியை. ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் தேரோட்டம். திருக்குற்றாலம் குற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக் கோயில் சந்தனகாப்பு விடாயற்றி.

பங்குனி 25, ஏப்ரல் 8, திங்கள்  

திரிதியை,  கார்த்திகை விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்  சித்திரைப் பெருவிழாத் தொடக்கம். மதுரை ஸ்ரீ மீனாட்சி துவஜாரோகணம். சுவாமி அம்பாள் கற்பக ரிஷப சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. சௌபாக்ய கெளரீவிரதம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் புஷ்ப பல்லக்கு.

பங்குனி 26, ஏப்ரல் 9, செவ்வாய்  

சதுர்த்தி விரதம். சக்தி கணபதி விரதம். ஆறுமுக மங்கலம் 1001 விநாயகர் உற்சவம் ஆரம்பம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு. நேச நாயனார் குருபூஜை. திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் தேரோட்டம். பாலையூர் முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா, கீழநாஞ்சில்நாடு முத்தாட்சியம்மன் தீச்சட்டி திருவிழா.

பங்குனி 27, ஏப்ரல் 10, புதன்  

பஞ்சமி. அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் பூக்குழி விழா, மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி தேரோட்டம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருநாவலூரில் சூரிய பூஜை.

பங்குனி 28, ஏப்ரல் 11, வியாழன்  

சஷ்டி. சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் திருவீதியுலா. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் ரிஷப சேவை. சீர்காழி திருமுலைப்பால் உற்சவம். திருவையாறு அந்தணர்புரம் ஸ்ரீநந்திகேஸ்வரர் ஜனனம்.

பங்குனி 29, ஏப்ரல் 12, வெள்ளி  

சந்தான சப்தமி. மதுரை ஸ்ரீமீனாட்சி சொர்க்கநாதர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர்
திருக்கல்யாணம். அசோகாஷ்டமி. திருமழப்பாடியில் ஸ்ரீநந்திகேஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாணம்.

பங்குனி 30, ஏப்ரல் 13, சனி  

அஷ்டமி. ஸ்மார்த்த ஸ்ரீராம நவமி. திருவள்ளுர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருடவாகனத்தில் புறப்பாடு. குடந்தை ராமபிரான், கரிவலம்வந்த நல்லூர், பாபநாசம், திருக்குற்றாலம் கோவில்பட்டி இத்தலங்களில் தேரோட்டம். வடலூர் மாதபூசம், வடுவூர் கோதண்டராமர் துவஜாரோகணம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் திருத்தேர். வசந்த நவராத்திரி பூர்த்தி, பருத்தியூர் ஸ்ரீநாமநவமி உற்சவ ஆரம்பம். ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் ரதம்.

தொகுப்பு: ந. பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malta_111

    மால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன

  • egypt_100011

    எகிப்தில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

  • brazil_makkal111

    பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்

  • sculptor_italyyy11

    ரோம் நகரில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை வடிக்கும் சிற்பி!! : மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்

  • semmary_aadu_spayin11

    பாரம்பரிய முறைப்படி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்ற 2000 செம்மறி ஆடுகள் !! : புகைப்படத்தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்