SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடந்தை சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றம்

2019-03-14@ 14:57:49

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு இணையான 3வது கோயிலாகும். இந்த கோயிலில் பங்குனி உத்திர விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடந்தது. இதையடுத்து நேற்று கோயிலில் கொடியேற்று விழா நடந்தது. அப்போது உற்சவர், கோமளவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதைதொடர்ந்து தாயார் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (14ம் தேதி) முதல் 27ம் தேதி வரை 14 நாட்களுக்கு தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 23ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்