SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புவனகிரி ராகவேந்திரர் கோயிலில் அவதார தினவிழா

2019-03-14@ 14:56:02

புவனகிரி: கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் ராகவேந்திர சுவாமிகள் பிறந்தார். அவர் பிறந்த ஊரான புவனகிரியில் பிறந்த இடத்தில் ராகவேந்திரர் அவதார கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராகவேந்திரரின் அவதார தின விழா உற்சாகமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 424வது அவதார தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலையில் ராகவேந்திரருக்கு சுப்ரபாதம் மற்றும் ஸ்தோத்திர பாராயணத்தை தொடர்ந்து நிர்மால்ய அபிஷேகம் நடந்தது. இதையடுத்து 108 பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோயிலை வந்தடைந்தவுடன், ராகவேந்திரருக்கு பாலாபிஷேகமும், பஞ்சாமிர்த அபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் மலர் அலங்காரம் நடந்ததையடுத்து, ராகவேந்திரர் மலர் அலங்காரத்தோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து மதியம் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூரில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ராகவேந்திரர் அவதார தினத்தையொட்டி ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உணவு சாப்பிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராகவேந்திரர் சுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்